உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. திருமுருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. திருமுருகன்
பிறப்புமார்ச் 16, 1929
கூனிச்சம்பட்டு, புதுச்சேரி, இந்தியா
இறப்புசூன் 3, 2009(2009-06-03) (அகவை 80)
புதுச்சேரி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்இரா. சுப்பிரமணியம்
பெற்றோர்அ.இராசு
அரங்கநாயகி

முனைவர் இரா. திருமுருகன் (மார்ச் 16, 1929 - சூன் 3, 2009) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். தமிழக்கணத்திலும் இசைத்தமிழிலும் ஆர்வமுடைய இவர் இலக்கண ஆய்வு தொடர்பாக 21 நூல்களையும் இலக்கிய ஆய்வு தொடர்பாக 3 நூல்களையும் இசைத்தமிழ் தொடர்பாக 4 நூல்களையும் பாடல் நூல்கள் நான்கினையும் இடப்பெயராய்வு நூல் ஒன்றையும் 17 தமிழ்ப்பாடநூல்களையும் இயற்றியிருக்கிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ. இராசு, இரா.அரங்கநாயகி ஆகியோருக்கு மகனாக 1929 மார்ச் 16ஆம் நாள்[1] பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.

கல்வி

[தொகு]

இவர் பண்டிதம் (1951), கருநாடக இசை - குழல் மேனிலை (1958), பிரெஞ்சு மொழிப்பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.

பணி

[தொகு]
  1. 44 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் தமிழாசிரியர்.
  2. தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர்

வகித்த பொறுப்புகள்

[தொகு]

இரா. திருமுருகன் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்.[1]

  1. புதுவைத் தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவுக்குச் சிறப்புத் தலைவர்
  2. "தெளிதமிழ்" என்னும் திங்கள் ஏட்டுக்குச் சிறப்பு ஆசிரியர்
  3. "தமிழ்க்காவல்" என்னும் இணைய இதழ் ஆசிரியர்
  4. தமிழ்நாட்டரசின் தமிழிலக்கண உருவாக்கக்குழு உறுப்பினர்
  5. சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்
  6. புதுவை அரசின் ஆட்சிமொழிச்சட்ட நடைமுறைப்படுத்தல் ஆய்வுக்குழு உறுப்பினர்

இயற்றிய நூல்கள்

[தொகு]
  1. நூறு சொல்வதெழுதல்கள், 1957
  2. இனிக்கும் இலக்கணம், 1981
  3. கம்பன் பாடிய வண்ணங்கள், 1987
  4. இலக்கண எண்ணங்கள்,1990
  5. பாவேந்தர் வழி பாரதி வழியா?, 1990
  6. சிந்து இலக்கியம், 1991
  7. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம், 1993
  8. சிந்துப்பாவியல், 1994
  9. மொழிப்பார்வைகள், 1995
  10. பாவலர் பண்ணை, 1997
  11. மொழிப்புலங்கள், 1999
  12. இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள், 2001

மொழி வளர்ச்சி

[தொகு]
  1. என் தமிழ் இயக்கம்-1, 1990
  2. என் தமிழ் இயக்கம்-2, 1992
  3. தாய்க்கொலை, 1992
  4. என் தமிழ் இயக்கம்-3, 1994
  5. என் தமிழ் இயக்கம்-4, 1996
  6. என் தமிழ் இயக்கம்-5, 1998
  7. எருமைத் தமிழர்கள், 1998
  8. இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?, 1999
  9. கழிசடைகள், 2002
  10. என் தமிழ் இயக்கம்-6, 2005
  11. என் தமிழ் இயக்கம்--7, 2006
  12. இலக்கிய எண்ணங்கள், 1998
  13. புகார் முத்தம், 1991
  14. கற்பு வழிபாடு, 1994
  15. கொஞ்சு தமிழ்ப்பெயர்கள், 2008

பாடல்

[தொகு]
  1. ஓட்டைப் புல்லாங்குழல், 1990
  2. கம்பனுக்குப் பாட்டோலை, 1990
  3. பன்னீர்மழை, 1991
  4. அருளையா? பொருளையா?, 1999

இசை

[தொகு]
  1. பாவேந்தரின் இசைத்தமிழ், 1990
  2. இசுலாம் வளர்த்த இசைத்தமிழ், 1996
  3. ஏழிசை எண்ணங்கள், 1998
  4. சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம், 2000
  5. அண்ணாமலையாரின் காவடிச்சிந்து, 2008

வரலாறு

[தொகு]
  1. புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது, 1994
  2. பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

சிறப்புப்பட்டங்கள்

[தொகு]

இரா. திருமுருகன் தனது கல்விப்பட்டங்களுக்கு அப்பால் பின்வரும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.[1]

  1. நல்லாசிரியர் - இந்திய ஒன்றிய அரசு வழங்கியது
  2. தமிழ்க்காவலர்
  3. சிந்திசைச்செம்மல்
  4. மொழிப்போர் மறவர்
  5. முத்தமிழ்ச்சான்றோர்

நிறுவுநர்

[தொகு]

இவர் பின்வரும் அமைப்புகளை நிறுவியுள்ளார்:[1]

  1. புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளை
  2. முனைவர் இரா. திருமுருகன் அறக்கட்டளை
  3. 'தெளிதமிழ்'த் திங்கள் இதழ்

மறைவு

[தொகு]

முனைவர் இரா. திருமுருகனார் ஜூன் 3, 2009 அதிகாலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்[2].

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 திருமுருகன் முனைவர் இரா; எருமைத்தமிழர்கள் நூலின் பின்னட்டை; ஏழிலிசைச் சூழல், 62 மறைமலையடிகள் சாலை, புதுச்சேரி-605001
  2. முனைவர் இரா.திருமுருகன் மறைவு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._திருமுருகன்&oldid=3593387" இலிருந்து மீள்விக்கப்பட்டது