உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்பூர் சதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம்பூர் சதார் (Rampur chaddar) என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இராம்பூர் நகரில் தோன்றிய ஒரு வகையான கைகளால் நூற்கப்பட்ட கம்பளி சால்வை ஆகும். பின்னர் இவை லூதியானா, அமிர்தசரசு போன்ற பஞ்சாப் நகரங்களில் தயாரிக்கப்பட்டன.[1][2] மேலும் இந்தியாவிற்கு வெளியே இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.

பெயர்

[தொகு]

சடர், சடார், சதர், சதார் என்பது ஓர் இந்தி வார்த்தையாகும். இதன் பொருள் படுக்கை விரிப்பு (செவ்வகத் துணி துண்டு) என்பதாகும்.[3] இராம்பூர் சதார் என்பதற்கு இராம்பூர் புசார் என்ற பெயர் சூட்டப்பட்டது.[1]

பொருள்

[தொகு]

ஒரு காலத்தில் இராம்பூரில் 2000 சால்வை நெசவாளர்களும் 500 கம்பளி உற்பத்தியாளர்களும் இருந்தனர். இவர்கள் புசாகரிடமிருந்து கம்பளியைப் பெற்று வந்தனர்.[1]

அமைப்பு

[தொகு]

இத்துணி மென்மையான அமைப்பினைக் கொண்டது. இராம்பூர் சதார்கள் கம்பளி மற்றும் பட்டு அல்லது பருத்தி ஆகியவற்றைக் கொண்டு நெய்யப்பட்டன.[4] தரம் நன்றாகவும், மென்மையாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருந்தபோதிலும், இது பஷ்மினாவுக்குச் போன்று இல்லை.[5]

பயன்பாடு

[தொகு]

இராம்பூர் சதார்கள் போர்வையாகவோ சால்வையாகவோ இந்தியா முழுவதும் விற்கப்பட்டன.[6] 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய உற்பத்தி என்று விற்கப்பட்ட விசைத்தறி மாதிரிகள் இறக்குமதி செய்யப்பட்டதன் விளைவாக இவை பிரபலமடைந்தன.[4]

மேலும் காண்க

[தொகு]
  • புட்டூ

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 MATHEWS, KOLANJIKOMBIL (2017). Encyclopaedic Dictionary of Textile Terms: Four Volume Set (in ஆங்கிலம்). Woodhead Publishing India PVT. Limited. p. 1171. ISBN 978-93-85059-66-7.
  2. Watson, John Forbes (1873). A Classified and Descriptive Catalogue of the Indian Department (in ஆங்கிலம்). W.H. Allen. p. 130.
  3. "English Translation of "चादर" | Collins Hindi-English Dictionary". www.collinsdictionary.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-04.
  4. 4.0 4.1 Watt, Sir George (1987). Indian Art at Delhi 1903: Being the Official Catalogue of the Delhi Exhibition 1902-1903 (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. pp. 341, 351. ISBN 978-81-208-0278-0.
  5. Wingate, Isabel Barnum (1979). Fairchild's dictionary of textiles. Internet Archive. New York : Fairchild Publications. p. 492. ISBN 978-0-87005-198-2.
  6. Gazetteer of the Amritsar District, 1892-93 (in ஆங்கிலம்). Revenue Department. 1991. p. 111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்பூர்_சதார்&oldid=4208062" இலிருந்து மீள்விக்கப்பட்டது