உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்நாட் கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்நாட் கிருஷ்ணன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1918-09-14)செப்டம்பர் 14, 1918
தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 29, 1973(1973-01-29) (அகவை 54)
இந்தியா
தொழில்(கள்)கருநாடக இசைக் கலைஞர்

இராம்நாட் கிருஷ்ணன் (Ramnad Krishnan) (14 செப்டம்பர் 1918 - 29 ஜனவரி 1973)ஓர் கருநாடக இசைப் பாடகராவார். கிருஷ்ணன் தனது பள்ளிப்படிப்பை அப்போதைய சென்னை மாகாணத்திலிருந்த இராமநாதபுரத்தில் பயின்றார். இவரது மூத்த சகோதரர் பேராசிரியர் வை. லட்சுமிநாராயணா இவருக்கு இசைப் பயிற்சி அளிக்க சி. எஸ். சங்கரசிவம் என்பவரிடம் அழைத்துச் சென்றார். பின்னர், கருநாடக இசைப் பாடகர் டி. பிருந்தாவின் கீழ் பயிற்சிப் பெற்றார்.[1] அவரிடமிருந்து கிருஷ்ணன் சகானா, மத்தியமாவதி மற்றும் தீரசங்கராபரணம் போன்ற இராகங்களை திறம்படக் கற்றார். பின்னர் சென்னையிலுள்ள அரசு கருநாடக இசைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்காவின் கனெடிகட்டிலுள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் இருந்தார்.[2][3][4][5]

கிருஷ்ணன் ஒரு இசைக் குடும்ப பாரம்பரியத்திலிருந்து வந்தார் .இவரது மூத்த சகோதரர் பாடகரும் வயலின் கலைஞருமான பேராசிரியர் வி. லட்சுமிநாராயணன் கிளீவ்லாந்து தியாகராஜர் விழாவின் நிறுவன அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். இவரது இளைய சகோதரரும், மிருதங்கக் கலைஞருமான இராம்நாட் இராகவன் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தார். வயலின் கலைஞர்களான எல். வைத்தியநாதன், எல். சுப்பிரமணியம் மற்றும் எல். சங்கர் ஆகியோர் இவரது மருமகன்கள் ஆவர்.[6] கிருஷ்ணன், நோன்சச் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற இசைத் தொகுப்புகளை பதிவு செய்துள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramnad Krishnan: A Confluence Of Three Streams". www.magzter.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  2. "Artist in Residence Raghavan Dies Nov. 21". News @ Wesleyan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  3. Vijayakrishnan, K.G. (2008). The Grammar of Carnatic Music. Phonology and Phonetics [PP]. De Gruyter. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-019888-1. பார்க்கப்பட்ட நாள் 27 Apr 2023.
  4. Dutta, M. (2008). Let's Know Music and Musical Instruments of India. Let's know. IBS BOOKS (UK). p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905863-29-7. பார்க்கப்பட்ட நாள் 27 Apr 2023.
  5. Das, P.K. (2013). The Homecoming and Other Stories. Partridge Publishing India. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-1049-3. பார்க்கப்பட்ட நாள் 27 Apr 2023.
  6. "Artist in Residence Raghavan Dies Nov. 21". News @ Wesleyan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  7. "Nonesuch Records Music of South India: Songs of the Carnatic Tradition". Nonesuch Records Official Website (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்நாட்_கிருஷ்ணன்&oldid=4042306" இலிருந்து மீள்விக்கப்பட்டது