இராமகிருசுணா கௌடா
இராமகிருசுணா கௌடா Ramakrushna Gouda | |
---|---|
ஒடிசாவின் சட்டமன்றம் உறுப்பினர் | |
பதவியில் 1990–1995 | |
முன்னையவர் | உமாகாந்த மிசுரா |
பின்னவர் | பிக்ரம் கேசரி அருக்கா |
தொகுதி | பாஞ்சாநகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 28, 1932 பாஞ்சாநகர், காஞ்சம் , ஒடிசா, இந்தியா |
இறப்பு | 1 மே 2010 | (அகவை 77)
அரசியல் கட்சி | சனதா தளம் |
துணைவர் | அனுசயா கௌடா |
பிள்ளைகள் | 7 (1 மகன், 6 மகள்கள்) |
பெற்றோர் |
|
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகர் |
இராமகிருசுணா கௌடா (Ramakrushna Gouda) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா சட்டப்பேரவையில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இவர் பாஞ்சா நகர்சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 10 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 முதல் 1995 ஆம் ஆண்டு வரையில் இராமகிருசுணா கௌடா ஒடிசா சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
இராமகிருசுணா கௌடாவின் தந்தையின் பெயர் பினாயக்கு கௌடா என்பதாகும். இராமகிருசுணா கௌடா அனுசயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இலட்சுமண் கௌடா ஒடிசா அரசியலில் முதலில் சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.
2010 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இராமகிருசுணா கௌடா காலமானார். [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MLA Ramakrushna Gouda Profile - BHANJANAGAR Constituency". Odisha Helpline- a journey to your roots !. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
- ↑ "Ramakrushna Gouda". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.