இராபர்ட் ஹரே (வேதியியலாளர்)
இராபர்ட் ஹரே (Robert Hare, 17 சனவரி 1781 – 15 மே 1858) ஒரு தொடக்ககால அமெரிக்க வேதியியலாளர் ஆவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இராபர்ட் ஹரே, பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் 1781 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாள் பிறந்தார். இவர் 1800-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆக்ஸ்போர்டின் எட்வர்ட் டேனியல் கிளார்க்குடன் இணைந்து ஆக்சி-ஹைட்ரஜன் ஊதுகுழாயை உருவாக்கிப் பரிசோதனை செய்தார். இவர் ஹாரியட் கிளார்க்கை மணந்து ஆறு குழந்தைகளைப் பெற்றார். 1802 ஆம் ஆண்டில், ஹேர் அமெரிக்க தத்துவவியல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1810 மற்றும் 1812 க்கு இடையிலான காலகட்டத்திலும் மற்றும் 1818 மற்றும் 1847 க்கு இடையிலான காலகட்டத்திலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1820 களில், ஹேர் "மின்சார எரியூட்டி" ஒன்றை உருவாக்கினார். இது ஒரு வகை வேதி மின்கலத்தை உருவாக்கியது. இது அதிவிரைவான மற்றும் திறன்வாய்ந்த எரிதல் வினையை நிகழ்த்த பயன்படுத்தப்படுகிறது. [1] இவர் 1824 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதெமியில் ஒரு இணை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
ஹரே 1958 மே 15 அன்று பிலடெல்பியாவில் இறந்தார் [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kneeland, Timothy W. (2008). Robert Hare: Politics, Science, and Spiritualism in the Early Republic. The Pennsylvania Magazine of History and Biography. Vol. 132, No. 3. pp. 245-260.
- ↑ "Book of Members, 1780–2010: Chapter H" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் September 9, 2016.
- ↑ Jordan, John W. (1978). Colonial And Revolutionary Families Of Pennsylvania. Genealogical Publishing Company. pp. 130-131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8063-0811-7