இராணி பிர்லா பெண்கள் கல்லூரி
Appearance
ராணி பிர்லா பெண்கள் கல்லூரி | |
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1961 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
முதல்வர் | டாக்டர் சுனேத்ரா சின்ஹா |
அமைவிடம் | , , 22°32′39″N 88°21′26″E / 22.5442706°N 88.357121°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | வங்காளம் |
இணையதளம் | Rani Birla Girls’ College |
ராணி பிர்லா பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஒரு பெண்கள் இளங்கலை கலைக் கல்லூரி ஆகும்.[1] 1961 ஆம் ஆண்டில் பி. எம். பிர்லா குடும்பத்தால் ராணி ஜோகேஸ்வரி தேவி பிர்லாவின் நினைவாக நிறுவப்பட்ட இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
தற்போது அக்குடும்ப நிர்வாகத்திலிருந்து 1998 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் மாற்றப்பட்டு மேற்கு வங்க அரசாங்கத்தின் கீழ் ஒரு உதவி பெறும் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
துறைகள்
[தொகு]கலைப்பிரிவு
[தொகு]- ஆங்கிலம்
- இந்தி
- வரலாறு
- புவியியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- கல்வி
- சமூகவியல்
- தொடர்பு ஆங்கிலம்
- பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு
- நாகரிக மற்றும் ஆடை வடிவமைப்பு
அங்கீகாரம்
[தொகு]பிர்லா பெண்கள் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது[3] மேலும் இது என்ஏஏசி பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- ரைமா சென், நடிகை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
- ↑ Bhavan's Journal (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan. 1982. p. 76. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ Colleges in West Bengal, University Grants Commission