உள்ளடக்கத்துக்குச் செல்

இராசத்தான் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 26°53′07″N 75°49′12″E / 26.8852°N 75.8199°E / 26.8852; 75.8199
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசத்தான் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைDharmo Vishwasya Jagatah Pratishtha
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1948 (77 ஆண்டுகளுக்கு முன்னர்) (1948)
வேந்தர்இராசத்தான் மாநில ஆளுநர்
துணை வேந்தர்அல்பனா கதீஜா[1]
அமைவிடம்,
26°53′07″N 75°49′12″E / 26.8852°N 75.8199°E / 26.8852; 75.8199
வளாகம்ஊரகம்
சேர்ப்புயுஜிசி,[2] ஏஐயு[3]
இணையதளம்www.uniraj.ac.in
இராசத்தான் பல்கலைக்கழகம் is located in செய்ப்பூர்
இராசத்தான் பல்கலைக்கழகம்
ஜெய்பூரில் அமைவிடம்
இராசத்தான் பல்கலைக்கழகம் is located in இராசத்தான்
இராசத்தான் பல்கலைக்கழகம்
இராசத்தானில் அமைவிடம்
இராசத்தான் பல்கலைக்கழகம் is located in இந்தியா
இராசத்தான் பல்கலைக்கழகம்
இந்தியாவில் அமைவிடம்

இராசத்தான் பல்கலைக்கழகம் (University of Rajasthan-RU) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத் தலைநகரான செய்ப்பூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஆகும். மாநில அரசின் ஆளுகைக்குட்பட்ட இப்பல்கலைக்கழகம் 1947 ஆம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் முக்கிய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் மாநிலத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். இராசத்தான் மாநில ஆளுநர் இப்பல்கலைக்கழக வேந்தராக பொறுப்பு வகிப்பார்.[4]

வளாகம்

[தொகு]
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில்

ஜெய்ப்பூரின் முதுகெலும்பு என்றழைக்கப்படும் சவகர்லால் நேரு மார்க் பகுதியில் சுமார் 285.29 ஹெக்டேர் (705.0) ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த மைய வளாகத்தில் பல்வேறு துறைகள், நூலகங்கள், விளையாட்டு வளாகங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகியது. பல்கலைக்கழகத்தில் ஒரு நவீன விளையாட்டு வளாகம் மற்றும் ஒரு நீச்சல் குளம் அமைந்துள்ளது. முன்னர் பல தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய போட்டிகள் நடக்கும் இடமாக இவ்வளாகம் இருந்து வருகிறது.[5]

அமைப்பும் நிர்வாகமும்

[தொகு]

இணைந்த கல்லூரிகள்

[தொகு]

இதன் அதிகார வரம்பு தௌசா மற்றும் செய்ப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் பரவியுள்ளது. 2018 ஆண்டு இராசத்தான் பல்கலைக்கழகம் தனது 255 இணைப்பு கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.[6] சில இணைப்புக் கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு:

  • ராவத் பி. ஜி. பெண்கள் கல்லூரி
  • ஸ்ரீ சத்ய சாய் பி. ஜி. மகளிர் கல்லூரி

உறுப்புக் கல்லூரிகள்

[தொகு]
  • பல்கலைக்கழகம் வர்த்தக கல்லூரி[7]
  • பல்கலைக்கழக வணிகவியல் கல்லூரி[7]
  • பல்கலைக்கழக மகாராஜா கல்லூரி[7]
  • பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
  • பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மையம்-II
  • பல்கலைக்கழக ராஜஸ்தான் கல்லூரி
  • அரசு சம்பார் கல்லூரி [7]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]
  • அசோக் குமார் - கள ஹாக்கி வீரர்
  • ஜக்தீப் தன்கர் - இந்திய துணைத் தலைவர் [8]
  • பஜன் லால் சர்மா - ராஜஸ்தானின் முதல்வர்
  • ரோஹித் போஹ்ரா, அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்
  • டி. பி. சர்மா - சமூக ஆர்வலர்
  • ஜெயேந்திரா கே. - இயற்பியலாளர்
  • பூபேந்திர ஜடாவத் - நடிகர்
  • ராம்குமார் சிங் - பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
  • விபூதி பூஷன் சர்மா - அதிகாரத்துவவாதி, வழக்கறிஞர்
  • வித்யாதர் கோவிந்த் ஓக் - அதிகாரத்துவம், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
  • வினீத் சோனி - உயிரியலாளர்
  • அனுமான் பெனிவால் - அரசியல்வாதி
  • ஜுஹைர் அல்-சூன், இராஜதந்திரி, இந்தோனேசியாவுக்கான பாலஸ்தீன தூதர் (2018-தற்போது வரை)
  • யோகேந்திர யாதவ், அரசியல்வாதி மற்றும் வாக்கு கணிப்பாளர்
  • லலித் யாதவ் (அரசியல்வாதி), அரசியல்வாதி மற்றும் உறுப்பினர் ராஜஸ்தான் சட்டமன்றதிற்கு,2023 இல் முண்டாவார் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மனிஷ் யாதவ், அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் அரசியல்வாதி மற்றும் 18வது மக்களவை உறுப்பினர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vice-Chancellor" (in ஆங்கிலம்). Archived from the original on 28 September 2023. Retrieved 28 September 2023.
  2. "State University Directory, University Grants Commission, India". ugc.ac.in. Archived from the original on 4 September 2017. Retrieved 2014-09-18.
  3. "Association of Indian Universities member list". aiuweb.org. Retrieved 2014-09-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "University of Rajasthan: An Overview". Archived from the original on 2 July 2014. Retrieved 30 June 2014.
  5. "University of Rajasthan - Main Website". Archived from the original on 25 July 2022. Retrieved 25 July 2022.
  6. "University of Rajasthan - Main Website". www.uniraj.ac.in. Archived from the original on 26 October 2022. Retrieved 2022-10-26.
  7. 7.0 7.1 7.2 7.3 "Rajasthan University: Mad scramble begins for college hostel seats - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/jaipur/Rajasthan-Universitycollege-hostel-seats/articleshow/20851081.cms. 
  8. "Jagdeep Dhankhar: NDA's VP candidate is a Jat leader, coffee lover and Mamata-critic". 16 July 2022 இம் மூலத்தில் இருந்து 17 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220717102745/https://www.tribuneindia.com/news/nation/jagdeep-dhankar-lawyer-turned-politician-and-mamata-banerjees-bete-noire-413045. 

வெளியிணைப்புகள்

[தொகு]