இரவு வரவில்லை (நூல்)
Appearance
நூலாசிரியர் | கவிஞர் வாணிதாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | கவிதை |
வெளியீட்டாளர் | ஐயை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 1963 |
பக்கங்கள் | 88 |
இரவு வரவில்லை என்பது ஒரு கவிதைத் தொகுப்பு நூல். இந் நூலில் கவிஞர் வாணிதாசன் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது நாட்டுடமையாக்கப்பட்ட நூலாகும்.
நூல் பற்றி
[தொகு]இந்நூலிலுள்ள கவிதைகள் அனைத்தும் இதழ்களிலும், கவியரங்குகளிலும், நூல் மலர்களிலும் வெளிவந்தவை ஆகும். இந்நூல் வாணிதாசனின் பன்னிரண்டாவது நூலாகும். 1963ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூல், 88 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பதிப்புரை
[தொகு]பதிப்புரையில் சில வரிகள் பின்வருமாறு: "தமிழ் மக்களின் வாழ்க்கை அகம், புறம் என்னும் இரு வகையுள் அடங்கும். அதனை விளக்கும் இலக்கியமே இரவு வரவில்லை என்பதாகும். அகவிலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாய் இலங்குகின்றது இதன் முதற்பகுதியான இன்பப் பகுதி. ஏனையவை புறவிலக்கணத்திற்கு எடுத்துக்கட்டாய் இலங்குகின்றன." - ஐயை பதிப்பகத்தார்.
நூலின் உள்ளடக்கம்
[தொகு]இன்பம்
[தொகு]- இரவு வரவில்லை
- என்ன செய்வாய்?
- உனக்கேது காதல்?
- துயர் அறிவாரோ தோழி
- ஆர் ஓலை விட்டார்
- எங்கிருந்தால் என்ன?
- மறந்து போ!
- முல்லையும் வண்டும்
- விழியோ? அல்ல! அல்ல!
- நீ இல்லாச் சில நாட்கள்!
- சிரித்தாளே!
- பக்கத்தில் நீ இல்லை!
- முடியாதே!
- வாராயோ?
- காளையின் கடிதம்
- அவளில்லா வாழ்வு!
- அவளும் நானும்
- கேட்டதுண்டோ?
- உண்டோ தோழி?
- அவனினும் கொடியள்!
- ஓடோடி வந்தாள்!
- பிரிவு
- என்ன முழுகிவிடும்?
- இதுவல்ல வேளை!
பூக்காடு
[தொகு]- கனவு ஒரு கானல்
- எழுத்தாளர் கடமை
- கார்த்திகை விளக்கு
- அடங்கா ஆவல்!
- சுதந்தரம்
- அகந்தை அற்றுவிட்டால்..?
- அதுவே போதும்!
- கோலெடுத்தால்..
- சொக்கிய நாள் வருமோ?
- விரைந்து வா!
- போவோம் புதுவைக்கு!
- யார் அவள்?
- ஏனோ?
- பேசவில்லை!
கையறுநிலை
[தொகு]- இதுவா கைம்மாறு?
- கொடுந்துயரம் அந்தோ!
- யாம் மறக்கப் போமோ?
- மண்ணோடு மண்ணானதே!
பன்மணித்திரள்
[தொகு]- மறப்பதுண்டோ காதல்?
- குடியாட்சி
- தங்கத்தாமரை மலர்ந்ததுவே!
- எல்லோரும் செத்தவரோ?
- தலைமைக் கவிதை
- பாரிக்குத் தாலாட்டு
- வாழ்வீர்!
- நன்றி உங்கள் வருகைக்கு!
- எங்கள் அண்ணா!
- கலைஞர் வாழ்க!
- பாரி வாழ்க!
மேற்கோள்கள்
[தொகு]- http://thamizhagam.net/nationalized%20books/Vanidhasan/IRAVU%20VARAVILLAI.pdf பரணிடப்பட்டது 2013-11-16 at the வந்தவழி இயந்திரம்
- கவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன்