உள்ளடக்கத்துக்குச் செல்

இரந்தீர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரந்தீர் சிங்
உறுப்பினர்- சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிகலாகோட் சுந்தர்பனி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

இரந்தீர் சிங் (Randhir Singh-பிறப்பு 1966) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இரந்தீர் சிங் கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]

இளமை

[தொகு]

இரந்தீர் சிங், சம்மு காசுமீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலாகோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை கியான் சிங்.[3]

அரசியல்

[தொகு]

2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிங் வெற்றி பெற்றார். இவர் 35,010 வாக்குகளைப் பெற்று, தனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் யாசூ வர்தன் சிங்கை 14,409 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kalakote–Sunderbani, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Randhir Singh defeats JKNC's Yashu Vardhan Singh with 14409 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  2. "Kalakote-Sunderbani Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  3. "Randhir Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- KALAKOTE - SUNDERBANI(RAJOURI) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-10-10.
  4. "Kalakote–Sunderbani Vidhan Sabha Election Results 2024 Highlights: Kalakote-Sunderbani में BJP ने JKNC को दी शिकस्त". आज तक (in இந்தி). 2024-10-08. Retrieved 2024-10-10.
  5. "Kalakote - Sunderbani Constituency Election Results 2024: Kalakote - Sunderbani Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரந்தீர்_சிங்&oldid=4130390" இலிருந்து மீள்விக்கப்பட்டது