இரத்தம் ரணம் ரௌத்திரம்
இரத்தம் ரணம் ரௌத்திரம் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். எஸ். ராஜமௌலி |
தயாரிப்பு | டி.வி.வி. தானய்யா சுபாஸ்கரன் அல்லிராஜா (லைக்கா) |
திரைக்கதை | கே. வி. விஜயேந்திர பிரசாத் எஸ். எஸ். ராஜமௌலி |
வசனம் | சாய் மாதவ் புர்ரா (தெலுங்கு) மதன் கார்க்கி (தமிழ்) |
இசை | மரகதமணி |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் ராம் சரண் ஆலியா பட் அஜய் தேவ்கான் |
ஒளிப்பதிவு | கே.கே.செந்தில் குமார் |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | டிவிவி என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | லைக்கா தயாரிப்பகம் (தமிழ்நாடு) எச் ஆர் பிக்சர்ஸ் (கேரளம்) கே வி என் ப்ரொடக்சன்ஸ் (கருநாடகம்) பென் ஸ்டுடியோஸ் (வட இந்தியா) |
வெளியீடு | மார்ச்சு 25, 2022 |
ஓட்டம் | 182 நிமிடங்கள்[1] |
நாடு | ![]() |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹550 கோடி[2][3] |
மொத்த வருவாய் | ₹1,388 கோடி [4] |
இரத்தம் ரணம் ரௌத்திரம், சுருக்கமாக ஆர் ஆர் ஆர் (RRR, தெலுங்கு: రౌద్రం రణం రుధిరం) என்பது 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு அதிரடிக் காவியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் டிவிவி என்டர்டெயின்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடர்புடன் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கினார். இது 1920 ஆம் ஆண்டு, இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகிய புரட்சியாளர்கள் சந்திப்பது, அவர்களின் நட்பு மற்றும் இந்திய விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தை குறித்து ஒரு கற்பனை வரலாறுக் கதை ஆகும்.
இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ளார், கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவையும், ஏ. ஸ்ரீகர் பிரசாத் தொகுத்தலையும், சாபு சிரில் கலை வடிவமைப்பையும் செய்தனர். கே. வி. விஜயேந்திர பிரசாத், சாய் மாதவ் புர்ரா ஆகியோருடன் இணைந்து ராஜமௌலி இதற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். இதற்கு தமிழ் வசனங்கள் மதன் கார்க்கி எழுதினார்.
இரத்தம் ரணம் ரௌத்திரம் 2018 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் துவக்கபட்டு, 2021 ஆம் ஆண்டில் இறுதியடைந்த இப்படம் மார்ச்சு 25, 2022-ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமைகளை ஸ்டார் இந்தியா வாங்கியது.
இரத்தம் ரணம் ரௌத்திரம் திரைப்படம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த விமர்சனங்களை பெற்றது. 95ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது இப்படத்திலுள்ள "நாட்டு நாட்டு" பாடலுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு இந்திய திரைப்படம் பெற்ற முதல் ஆஸ்கார் விருதாகும். 69 ஆம் தேசிய திரைப்பட விருதுகளில் இப்படம் சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம், சிறந்து இசை (மரகதமணி) மற்றும் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் (கால பைரவா) ஆகிய விருதுகளை பெற்றது.
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
1920 ஆம் அண்டு, பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் போது, ஆளுநர் ஸ்கோட் பக்ஸ்டன் மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆகியோர் ஆதிலாபாத்தில் ஒரு காட்டிற்கு சென்று, கோண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த மல்லி என்ற ஒரு கலைத்திறமையுள்ள சிறுமியை தன் அம்மாவிடம் பிரிந்து கடத்துகின்றனர். இதனால் கோபமடைந்த பழங்குடியினரின் பாதுகாவலர் கொமரம் பீம், அக்தர் என்ற ஒரு முஸ்லிமாக மாறுவேடமிட்டு அவளை மீட்க தில்லிக்குச் செல்கிறான். ஐதராபாத் நிசாமத்தின் தூதர் ஒருவர் ஸ்கோட் அலுவலகத்தை பீமின் வருகையினால் வரக்கூடும் ஆபத்தை பற்றி எச்சரித்து, மல்லியை திருப்பித் தருமாறு வற்புறுத்தினார். இதையும் மீறி, ஒரு லட்சிய இந்திய பேரரசுக் காவல் அதிகாரியான அல்லூரி சீதாராம ராஜுவை கேத்தரின் பீமை கைது செய்ய நியமிக்கிறார். பீமின் இருப்பிடத்தைக் கண்டறிய, ராஜுவும் அவரது மாமா வெங்கடேஸ்வருலுவும் ஒரு சுதந்திர ஆதரவு கூட்டத்தில் கலந்துக்கொல்கிறார்கள். அங்கு அவர்கள் சுதந்திரத்தை ஆதரிப்பதாக போல் நடிக்கின்றனர். பீமின் கூட்டாளி லச்சு இவர்களின் தந்திரங்களுக்கு இரையாகி பீமின் சதித்திட்டத்தில் சேர்க்க முயல்கிறான். ஆனால், பீம் மறைவிடத்திற்கு இவர்களை அழைத்து செல்லும்பொழுது ராஜுவின் உண்மையான அடையாளத்தை அறிந்து லச்சு அவரிடம் தப்பி ஓடுகிறான். சிறிது நேரத்திற்குப் பிறகு, பீமும் ராஜுவும் ஒருவருக்கொருவர் சந்தித்து ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் ஒரு சிறுவனைக் காப்பாற்றுவதற்காக இணைந்து பணியாற்றுகின்றனர். தங்களின் எதிர்க்கும் விசுவாசங்களை அறியாமல், இருவருக்கு இடையில் ஒரு நெருங்கிய நட்பு உருவாகிறது.
ஜென்னி என்ற ஒரு ஆங்கிலப் பெண் ஆளுநர் ஸ்கோட்டின் மருமகள் ஆவாள், அவள் அரண்மனையில் தங்கியிருக்கிறாள். ராஜுவின் உதவியுடன், பீம் அவளுடன் பிணைத்து அரண்மனைக்கு அழைக்கபடுகிறான். அங்கே ஒரு அறையில் சிறைப்பிடிக்கப்பட்ட மல்லியை அவர் கண்டுப்பிடித்து, விரைவில் அவளை விடுவிப்பதாக உறுதியளிக்கிறான். இதற்க்கிடையில், ராஜு லச்சுவை கண்டுப்பிடித்து அவனை கைது செய்கிறான். அவனை விசாரிக்கும் போது, லச்சு ஒரு கட்டுவிரியன் பாம்புடன் ராஜுவை தாக்குகிறான். காட்டுவிரியன் நச்சிற்கான மாற்று மருந்து கோண்டுகளுக்கு மட்டும் தெரியும் என்றும், அவருக்கு வரவிருக்கும் சாவை பற்றியும் லச்சு எச்சரிக்கிறான். இதை எற்றுக்கொண்டு, லச்சுவை விடுவித்து ராஜு வெளியே உதவி தேட செல்கிறான். பின்னர், மிக பலவீனமான ராஜுவை கண்டுப்பிடித்து, அவரை ஒரு காட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டதாக பீம் உண்ர்கிறான். உடனடியாக மூலிகைகளுடன் அவருக்கு சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றுகிறான். ஆனால், ராஜுவின் உண்மையான அடையாளம் இன்னும் தெரியாமல், தனது பழங்குடி அடையாளத்தையும் தனது நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறான். அந்த இரவில், ஸ்கோட்டின் நினைவாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில், பீமின் ஆட்கள் காட்டு விலங்குகள் நிறைந்த லாரியுடன் அவரது அரண்மனைக்குள் ஊடுருவி, கூடியிருக்கும் விருந்தினர்களிடையே பெரும் நாசத்தை ஏற்படுத்துகிறார்கள். விலங்குகள் ஸ்கோட்டின் காவலர்களை கொல்கின்றன. இந்த கலவரத்தில் பீம் மல்லியை மீட்க முயற்சிக்கிறான். ஆனால், அவளை அரண்மனையிலிருந்து வெளியே அழைத்து செல்வதற்கு முன், ராஜு காவலர் சீருடை அணிந்து வருகிறான். பீம் ராஜுவின் உண்மை அடையாளத்தை உண்ர்ந்து, இருவர் தயக்கத்துடன் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர். ஸ்கோட் மல்லியைக் கொல்ல மிரட்டியதால், பீம் தனது கடமையிலிருந்து சரணடைந்து கைது செய்யப்படுகிறான். பீமை உயிருடன் பிடித்துவிட்டதால் ராஜு பதவி உயர்வு அடைகிறான்.
ராஜுவின் தந்தை அல்லூரி வெங்கடராம ராஜு என்ற ஒரு புரட்சியாளர், பிரித்தானிய குழல் துப்பாக்கிகளை கடத்தி தனது கிராம மக்களை பிரித்தானியப் படைகளுக்கு எதிராக ஆயுதமாக்க விரும்பினார். ஆனால், அதற்கு முன்பே அவர் பிராத்தானியப் படையாளர்களால் கொல்லப்பட்டார். தந்தையின் ஆசையை நிறைவேற, ராஜு தனது கிராமத்தையும் அவனது வருங்கால மனைவி சீதாவையும் விட்டுச் சென்று, பேர்ரசு காவலில் ஒரு உளவாளியாக சேர்ந்தான். பீமின் கைது காரணமாக கிடைத்த பதவி உயர்வினால் அவன் பிரித்தானிய ஆயுதக்கிடங்குக்கு முழு அணுக்கம் பெற்றார். தற்போது, தன் செய்த குற்றங்களுக்கு பீமுக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தண்டனையை பொது இடத்தில் நடத்தி, அவன் ஒரு உதாரணமாக, அருகில் வசிக்கும் பழங்குடி மக்கள் அனைவரும் அதை பார்க்க ஸ்கோட்டின் ஆட்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர். ராஜு பீம்மிடம் தன் செய்த குற்றங்களை துறக்க சம்மதிக்க முயல்கிறான், அதை செய்ய மறுத்தால் அவனுக்கு தூக்கு தண்டனை வழ்ங்கப்படும் என்ற காரணத்தால். பீம் இதை எதிர்த்து கசையடிக்கு ஒப்புகொல்கிறான். இதனால் காயமடைந்தும், அவன் எதிர்ப்புடன் பாடுகிறான். கூடியிருக்கும் பழ்ங்குடி மக்கள் பாடல் வரிகளால் பாதிக்கப்பட்டு கிளர்ச்சி செய்கின்றனர். இதைக் கண்டு ராஜு அதிர்ச்சியடைகிறான். தன் நண்பனின் நிலைமைக்கு அவன் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியினால், பீமும் மல்லியும் தப்பிக்க உதவ ராஜு ஒரு திட்டமிடுகிறான். அவன் படையாளர்களின் துப்பாக்கிகளை மோசடி செய்து, பீமின் தூக்கு தண்டனையை ரகசியமாக நடத்த ஸ்கோட்டை சம்மதிக்க வைக்கிறான். ஆனால், ஸ்கோட் திட்டத்தை கண்டுப்பிடிக்கிறார். ஸ்கோட்டின் ஆட்களிடமிருந்து மல்லியை காப்பாற்றும்போது, ராஜு படுகாயமடைகிறான். பீம் தன்னை விடுதலை செய்து, ராஜுவின் நேர்மையான செயல்கள் மல்லியை கொல்ல முயற்ச்சியாக தவறாக புரிந்துக்கொள்கிறான். ராஜுவை தடுக்க பீம் அவனை மோசமாக அடிக்கிறான். பீம் மல்லியை எடுத்து தப்பி தூரத்துக்கு ஒடுகிறான். அவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை, ராஜு மற்ற அதிகாரிகளை தடுக்கிறான். இதற்காக் அவன் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டப்பட்டு தனிமைச் சிறை ஒன்றில் அடைக்கப்படுகிறான்.
சில மாதங்களுக்கு பிறகு, பீம் தனது குழு மற்றும் மல்லியுடன் ஹாத்ரஸில் ஒரு அடைக்கலத்தில் மறைந்திருக்கிறான். இங்கே காலனித்துவ அதிகாரிகளால் சூழப்படுகிறார். ஆனால், அடைக்கலத்தில் பெரியம்மை நோயாளிகள் தங்கிறதாக ராஜுவின் வருங்கால மனைவி சீதா ஒரு தந்திரத்தை படைத்து அதிகாரிகளை விரட்டுகிறாள். பீம்மின் அடையாளம் தெரியாமல், அவனிடம் ராஜுவின் உண்மையான குறிக்கோளை பற்றியும், அவனது நெருங்கிய நண்பனை காப்பாற்றியதற்கு தனக்கு வரவிருக்கும் மரணதண்டனை பற்றியும் சொல்கிறாள். இதை கேட்டு, பீம் தன் தவறை உணர்ந்து ராஜுவை காப்பாற்றி சீதாவிடம் கொண்டு வர வாக்குறுதி அளிக்கிறான். ஜென்னியின் அனுதாப உதவியுடன், ராஜுவை வைத்திருக்கும் படைமுகாமின் வரைப்படம் பீம் பெறுகிறான். படைமுகாம் ஊடுருவி ராஜுவின் சிறையை கண்டுபிடித்து அவனை விடுதலை செய்கிறான். ஸ்கோட் அவன் கால்களை உடைப்பதாக உத்தரவிட்டதால், பீம் ராஜுவை தூக்கி தன் தோள்கள் மீது சுமத்தி இருவர் சேர்ந்து படையாளர்களை எதிர்த்து போராடுகிறார்கள். அருகிலுள்ள ஒரு காட்டுக்குள் அவர்கள் தப்பிக்கினர். அங்கே காவலர்கள் மற்றும் சிறப்பு படையாளர்கள் அவர்களை பதுங்கித் தாக்குகின்றனர். ராஜு அருகில் இருக்கும் ஒரு ராமர் சன்னதியிலிருந்து ஒரு வில்லும் அம்புகளையும் பீம் ஒரு ஈட்டியையும் எடுக்கிறார்கள். அவர்கள் பெற்ற ஆயுதங்களுடன் காவலர்கள் மற்றும் படையாளர்களை கொன்று ஸ்கொட்டின் அரண்மனைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். வழியில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து அதை வெடிபொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறைக்குள் வீசுகிறார்கள். அரண்மனை வெடித்து அழிக்கப்படுகிறது. பீம் அரண்மனைக்குள் இருக்கம் ஆயுதக்கிடங்கை மீட்டெடுத்து, அனைத்தும் துப்பாக்கிகளை ராஜுவிடம் கொடுக்கிறான். கேத்தரின் வெடிப்பில் கொல்லபடுகிறார். ஸ்கோட்டை ராஜுவும் பீமும் ஒரு பிரித்தானிய துப்பாக்கியால் சுட்டு கொல்கின்றனர்.
ராஜுவும் பீமும் கிடைசியில் சீதா, ஜென்னி மற்றும் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் இணைகின்றனர். அவர்களின் பணிகள் வெற்றிபெற்றதை குறிக்க ராஜு பீமிடம் ஒரு விருப்பத்தை நிறைவேற கேட்கிறான். பீம் தனக்கும் தன் சமூகத்திற்கும் ராஜுவிடம் கல்வியை பெற விரும்புகிறான், இது ராஜு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொல்கிறான். பிறகு, ராஜு சீதாவுடன் தனது கிராமத்திற்கு ஆயுதங்களோடு திரும்பிச் செல்கிறான். பீம் மல்லியை அவள் அம்மாவிடம் திரும்பி அனுப்பு தன் பழங்குடியுடன் மீண்டும் இணைகிறார். இத்துடன் கதை முடிகிறது
நடிகர்கள்
[தொகு]- ஜூனியர் என்டிஆர் - கொமரம் பீம்
- ராம் சரண் - அல்லூரி சீதாராம இராஜு
- அஜய் தேவ்கான் - அல்லூரி வெங்கடராம இராஜு
- ஆலியா பட் - சீதா
- சிரேயா சரன் - சரோஜினி
- சமுத்திரக்கனி - வெங்கடேஸ்வருலு
- ரே ஸ்டீவன்சன் - ஆளுநர் ஸ்கோட் பக்ஸ்டன்
- அல்லிசன் டூடி - கேத்தரின் பக்ஸ்டன்
- ஒலிவியா மோரிஸ் - ஜென்னி
பாடல்கள்
[தொகு]இரத்தம் ரணம் ரௌத்திரம் | |
---|---|
திரைப்பாடல்கள்
| |
வெளியீடு | ஏப்ரல் 16, 2022 |
இசைப் பாணி | திரையிசைப்பாடல் |
நீளம் | 29:27 |
இசைத்தட்டு நிறுவனம் | லஹரி மியூசிக் டி சீரீஸ் |
இசைத் தயாரிப்பாளர் | மரகதமணி |
இப்படத்திற்கு எழு பாடல்களுக்கும் பினன்னி இசைக்கும் மரகதமணி இசையமைத்துள்ளார். ஆறு பாடல்களுக்கு தமிழ் வரிகள் மதன் கார்க்கி எழுதியிருந்தார். "ராமம் ராகவம்" பாடலுக்கு சமசுகிருதம் வரிகள் இருந்ததால், அதற்கு மட்டும் கே. சிவ தத்தா எழுதியிருந்தார்.
தமிழ் பாடல்கள்
[தொகு]பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
"நட்பு" | அனிருத் ரவிச்சந்திரன் | மதன் கார்க்கி |
"நாட்டு கூத்து" | ராஹுல் சிப்லிகஞ்ச், யாசின் நிஜார் | மதன் கார்க்கி |
"உயிரே" | மரகதமணி | மதன் கார்க்கி |
"கொமரம் பீமானோ" | கால பைரவா | மதன் கார்க்கி |
"ராமம் ராகவம்" | விஜய் பிரகாஷ், சந்தன பால கல்யாண், சாரு ஹரிஹரன் | கே. சிவ தத்தா |
"கோலே" | விஷால் மிஷ்ரா, பென்னி தயாள், சாஹிதி சகந்தி, ஹரிகா நாராயண் | மதன் கார்க்கி |
"கொம்பா உன் காடா" | பிராகிருத்தி ரெட்டி | மதன் கார்க்கி |
தெலுங்கு பாடல்கள்
[தொகு]பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
"தோஸ்தி" | வேதால ஹேமச்சந்திரா | சிறீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி |
"நாட்டு நாட்டு" | ராஹுல் சிப்லிகஞ்ச், கால பைரவா | சந்திரபோசு |
"ஜனனி" | மரகதமணி | மரகதமணி |
"கொமரம் பீமுடோ" | கால பைரவா | சுத்தலா அசோக் தேஜா |
"ராமம் ராகவம்" | விஜய் பிரகாஷ், சந்தன பால கல்யாண், சாரு ஹரிஹரன் | கே. சிவ தத்தா |
"எத்தர ஜெண்டா" | விஷால் மிஷ்ரா, புருத்வி சந்திரா, மரகதமணி, சாஹிதி, ஹரிகா நாராயண் | ராமஜோகையா சாஸ்திரி |
"கொம்ம உய்யாலா" | பிராகிருத்தி ரெட்டி | சுத்தலா அசோக் தேஜா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Certificate Detail". Archived from the original on 14 April 2022. Retrieved 14 April 2022.
- ↑ "RRR: rajamouli-team-spend-huge-budget". Sakshi (in தெலுங்கு). 28 October 2021. Archived from the original on 22 March 2023. Retrieved 2 July 2023.
- ↑ "RRR (2022) - Movie - Box Office India".
- ↑ "Student No. 1 To RRR, A Look At The Box Office Collections Of SS Rajamouli Films". News18. 28 September 2023. Retrieved 3 October 2024.