உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைவால் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டைவால் குருவி
Juvenile bird in Calcutta with some brown and white feathers. Note the white rictal spot at the base of the beak.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. macrocercus
இருசொற் பெயரீடு
Dicrurus macrocercus
(Vieillot, 1817)
துணையினம்

D. m. macrocercus (Vieillot, 1817)[2]
D. m. albirictus (Hodgson, 1836)[3]
D. m. minor Blyth, 1850[4]
D. m. cathoecus Swinhoe, 1871[5]
D. m. thai Kloss, 1921[6]
D. m. javanus Kloss, 1921[6]
D. m. harterti Baker, 1918[7]

Approximate distribution of the Black Drongo
வேறு பெயர்கள்

Buchanga atra
Bhuchanga albirictus[8]

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (ஒலிப்பு) (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி, கருங்குருவி, கருவாட்டுக் குருவி, மாட்டுக்காரக் குருவி, வெட்டுவலியான் குருவி, நீண்டவால் குருவி, வழியான் குருவி, ஆனைச் சாத்தான் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.[9] திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்[10]. இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நீண்டு நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். இளம் பறவைகளுக்கு வயிற்றுப் பகுதியில் வெள்ளைத் திட்டு இருக்கும். பெரிய பறவைக்கு அலகின் அருகில் வெள்ளைப் புள்ளி இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கிறது. போதுவாக இவை மேய்ந்துக் கொண்டிருக்கும் ஆடு, மாடுகளின்மேல் அமர்ந்து இருக்கும். மாடுகள் நடக்கும்போது அவற்றின் கால்பட்டு செடிகளில் இருக்கும் சிறிய பூச்சிகள் பறக்கும்போது இவை பறந்துசென்று காற்றிலேயே அவற்றைப் பிடித்து உண்ணும். இவை பயமற்ற பறவைகளாகும். இவை தங்கள் கூட்டில் முட்டையிட்டு ஆண், பெண் குருவிகள் மாறிமாறி 15 நாட்கள் அடைகாத்த பிறகு குஞ்சு வெளிவரும். குஞ்சுகளுக்கு 21 நாட்களில் சிறகுகள், வால் போன்றவை முழுவதுமாக வளரும். முட்டையையும் குஞ்சுகளைப் பாதுகாக்க அதன் கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dicrurus macrocercus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Vieillot, Louis Jean Pierre (1817). Nouveau Dictionnaire d'Histoire Naturelle Appliquée aux Arts 9: 588. 
  3. Hodgson, Brian Houghton (1836). The India Review and Journal of Foreign Science and the Arts 1 (8): 326. 
  4. Blyth, Edward (1850). The Journal of the Asiatic Society of Bengal 19: 255. 
  5. Swinhoe, Robert (1871). Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London for the Year 2: 377. 
  6. 6.0 6.1 Kloss, Cecil Boden (1921). Journal of the Federated Malay States Museums. 10 pt. 3: 208. 
  7. Baker, Edward Charles Stuart (1918). "Some Notes on the Dicruridae". Novitates Zoologicae 25: 299. http://biodiversitylibrary.org/page/3857129. 
  8. Neave, Sheffield A., ed. (1939). Nomenclator Zoologicus; a List of the Names of Genera and Subgenera in Zoology from the Tenth Edition of கரோலஸ் லின்னேயஸ் 1758, to the End of 1935 (with supplements). Volume 1. Zoological Society of London, London. p. 425.
  9. "மாட்டுக்காரக் குருவி". Hindu Tamil Thisai. 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-06-01.
  10. பக்கம் 34, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைவால்_குருவி&oldid=4126161" இலிருந்து மீள்விக்கப்பட்டது