இயோகேந்திர சர்மா
இயோகேந்திர சர்மா Yogendra Sharma | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1972-1984 | |
தொகுதி | பீகார் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967-1971 | |
முன்னையவர் | மதுரா பிரசாத் மிசுரா |
பின்னவர் | சியாம் நந்தன் மிசுரா |
தொகுதி | பேகூசராய், பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரகீம்பூர் கிராமம், ககாரியா, தென் மாங்கியர் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 20 ஆகத்து 1915
இறப்பு | 15 மார்ச்சு 1990 | (அகவை 74)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கீதா சர்மா |
பிள்ளைகள் | இராமேந்திர குமார் (அரசியல்வாதி)]] |
மூலம்: [1] |
இயோகேந்திர சர்மா (Yogendra Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவர். 1915 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான இராச்யசபாவில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பேகூசராய் மக்களவைத் தொகுதியையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் அகில இந்திய கிசான் சபையின் தலைவராகவும் கிசான் இயக்கத்தை வழிநடத்தினார். 1962 ஆம் ஆண்டு முதல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கிசான் இயக்கங்கள், பஞ்ச நிவாரணப் பணிகள், பதுக்கல் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் வரிச்சுமைக்கு எதிரான சத்தியாகிரகம் ஆகிய -சமூக நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இயோகேந்திர சர்மா காலமானார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
- ↑ India. Parliament. Rajya Sabha. Secretariat (2006). Rajya Sabha at work. Rajya Sabha Secretariat. p. 92. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
- ↑ Near East/South Asia Report. Foreign Broadcast Information Service. 1983. pp. 81–82. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.
- ↑ Mainstream. N. Chakravartty. 1990. p. 33. பார்க்கப்பட்ட நாள் 1 January 2018.