இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல்
இயேசுவின் காலத்தில் எருசலேம் தேவாலயத்தை வணிகத்தலம் போல மாறியிருந்ததைக் கண்டு அங்கிருந்தவர்களைச் சாட்டையால் அடித்து துரத்திய நிகழ்வை கூறுவது இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வாகும். இந்நிகழ்வு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 21:12-17, மாற்கு 11:15-19, லூக்கா 19:45-48, யோவான் 2:13-22 ஆகிய நற்செய்தி வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1][2][3]
கோவிலைத் தூய்மைப்படுத்தல்
[தொகு]இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வை பற்றி நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளவை
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். --- யோவான் 2:13-17
ஆதாரங்கள்
[தொகு]திருவிவிலியம் மத்தேயு 21:12-17, மாற்கு 11:15-19, லூக்கா 19:45-48, யோவான் 2:13-22
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Temple Cleansing (13–25)". pp. 49–51. In Burge, Gary M (2005). "Gospel of John". In Evans, Craig A. (ed.). The Bible Knowledge Background Commentary: John's Gospel, Hebrews-Revelation. David C Cook. pp. 37–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7814-4228-2.
- ↑ The Fourth Gospel And the Quest for Jesus by Paul N. Anderson 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-567-04394-0 page 158
- ↑ Nyland, Jan (2016). The Lexham Bible Dictionary (PDF). Lexham Press.