இயக்கநிலை அழுத்தம்
பாய்ம இயக்கவியலில் இயக்கநிலை அழுத்தம் (Dynamic pressure) என்பது q (அ) Q எனும் எழுத்தால் சுட்டப்படுகிறது. இது திசைவேக அழுத்தம் என்றும் சிலவேளைகளில் குறிக்கப்பெறும். சமன்பாட்டு வடிவில் கீழ்க்காணுமாறு இயக்கநிலை அழுத்தம் குறிக்கப்படும்.
இங்கு (அனைத்துலக முறை அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன):
= இயக்கநிலை அழுத்தம் - பாஸ்கல் அலகில் குறிக்கப்பட்டுள்ளது, = பாய்ம அடர்த்தி - அலகு kg/m3 (எ-கா: காற்றின் அடர்த்தி), = பாய்மத் திசைவேகம் - அலகு m/s.
இயல்பார்ந்த அர்த்தம்
[தொகு]இயக்கநிலை அழுத்தம் பாய்மத் துணிக்கையின் இயக்க ஆற்றலுடன் நெருங்கிய தொடர்புடையது ஏனென்றால் இரு கணியங்களும் துணிக்கையின் திணிவு(இயக்கநிலை அழுத்தத்தினை பொறுத்தவரை அடர்த்தியாக) மற்றும் வேகத்தின் வர்க்கத்திற்கு நேர் விகித சமனானவை. இயங்குநிலை அழுத்தம் உண்மையில் பெர்னோலியின் சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். அடிப்படையில் இது இயங்கும் பாய்மத்திற்கான ஆற்றல் காப்பு சமன்பாடாகும். இயங்குநிலை அழுத்தமானது தேக்க அழுத்தம் மற்றும் நிலை அழுத்தம் இடையேயான வேறுபாட்டுக்கு சமமாக இருக்கும்.
உசாத்துணைகள்
[தொகு]- Clancy, L.J. (1975), Aerodynamics, Pitman Publishing Limited, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-273-01120-0
- Houghton, E.L. and Carpenter, P.W. (1993), Aerodynamics for Engineering Students, Butterworth and Heinemann, Oxford UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-54847-9
- Liepmann, Hans Wolfgang; Roshko, Anatol (1993), Elements of Gas Dynamics, Courier Dover Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-41963-0
வெளியிணைப்புகள்
[தொகு]- Definition of dynamic pressure on Eric Weisstein's World of Science