இமாம் அபூதாவூத்
அபூதாவூத் சுலைமான் இப்னு அல் அஸ்ஹத் அல் அஜ்தி அஸ் சிஸ்தானி | |
---|---|
பிறப்பு | கி.பி. 817 சிஸ்தான் |
இறப்பு | கி.பி.889 பசுரா |
இனம் | பாரசீகம் |
பணி | இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர் |
மதப்பிரிவு | இசுலாம் |
சட்டநெறி | ஹன்பலி |
ஆக்கங்கள் | சுனன் அபூதாவூத் |
செல்வாக்கு செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
அபூதாவூத் சுலைமான் இப்னு அல் அஸ்ஹத் அல் அஜ்தி அஸ் சிஸ்தானி (Abu Dawud Sulaymān ibn al-Ash‘ath al-Azdi as-Sijistani அரபு மொழி: أبو داود سليمان بن الأشعث الأزدي السجستاني), பொதுவாக இமாம் அபூதாவூத் என அழைக்கப்படுகிறார். இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர், குறிப்பாக முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) ஆவார். ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த சுனன் அபூதாவூத் ஹதீஸ் நூல் மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[2].
பிறப்பு
[தொகு]சிஸ்தான் என்ற ஊரிலே இ.நா 202வது ( கி.பி. 817 ) வருடத்தில் பிறந்தார். சஜஸ்தான் என்ற நகரில் பிறந்தமையால் அபூதாவூத் சஜஸ்தானீ என்று அழைக்கப்படுகிறார். அஷ்அஸ் என்பவர் இவர்களின் தகப்பனாராவார். இவரது இயற்பெயர் சுலைமான்.
கல்வி
[தொகு]இமாம் அபூதாவூத் சிறுவயதிலேயே பத்திசாலியாகவும் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் துரிதமாகச் செயல்பட்டதால் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இமாம் அபூதாவூதிற்குக் கிடைத்தது. ஹதீஸ் துறையிலும் மார்க்கச் சட்டத் துறையிலும் பெரும் பங்கு வகித்தார்.[3]
ஹதீஸ் தொகுப்பு
[தொகு]அவர் மொத்தம் 21 புத்தகங்களை எழுதியுள்ளார். மிக முக்கியமான சில:
- சுனன் அபூதாவூத் ஹதீஸ் நூல்--4,800 ஹதீஸ்கள் கொண்ட, அவருடைய முக்கியமான ஹதீஸ் தொகுப்பாக இருக்கிறது.
- கிதாப் அல்-மராசில்-- 600 முர்சல் ஹதீஸ்கள் பட்டியலிடுகிறது.
- தனது சுனன் அபூதாவூதை விவரித்து மக்காவின் குடிகளுக்கு எழுதிய கடிதமான ”ரிசாலத் அபூதாவூத் இலா அஹ்லிகி மக்கா”.[4]
கல்விக்காகப் பயணித்த ஊர்கள்
[தொகு]தன்னுடைய 18 வது வயதிலே கல்விக்காக பல ஊர்களுக்குப் பயணிக்க ஆரம்பித்தார். ஈராக், கூஃபா, பசுரா , ஷாம், ஜஸீரா, ஹிஜாஸ், எகிப்து, ஹுராஸான், சஜஸ்தான், ரய் ஆகிய ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்.
ஆசிரியர்கள்
[தொகு]இமாம் அஹ்மத், அலீ பின் மதீனி, யஹ்யா பின் மயீன், முஹம்மத் பின் பஷ்ஷார் மற்றும் பலர்.
இவரது மாணவர்கள்
[தொகு]இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ, இப்னு அபித்துன்யா, அபூ உவானா, இப்ராஹிம் பின் ஹம்தான் மற்றும் பலர்.
இறப்பு
[தொகு]இமாம் அபூதாவூத் 73 ஆம் வயதில் பசுரா நகரில் 11 ம் தேதி ஷவ்வால் மாதம் இ.நா 275 ( கி.பி. 888) இல் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Al-Bastawī, ʻAbd al-ʻAlīm ʻAbd al-ʻAẓīm (1990). Al-Imām al-Jūzajānī wa-manhajuhu fi al-jarḥ wa-al-taʻdīl. Maktabat Dār al-Ṭaḥāwī. p. 9.
- ↑ Various Issues About Hadiths
- ↑ "Imam Abu Dawud". www.sunnah.org. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
- ↑ "Translation of the Risālah by Abū Dāwūd". Archived from the original on 2009-08-19. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.