இமயமலை பழுப்புக் கரடி
இமயமலை பழுப்புக் கரடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அர்சசு
|
இனம்: | அ. அர்க்டோசு
|
துணையினம்: | அ. அ. இசபெல்லினசு
|
முச்சொற் பெயரீடு | |
அர்சசு அர்க்டோசு இசபெல்லினசு கோர்சுபீல்டு, 1826 |
இமயமலை பழுப்புக் கரடி (Himalayan Brown Bear) என்பது ஒரு கரடி இனமாகும். இது பழுப்புக் கரடியின் கிளையினம் ஆகும். இந்த கரடிதான் தொன்மங்களில் கூறப்பட்ட எட்டி (மனிதன்) என்று கருதப்படுகிறது.[1][2]
விளக்கம்
[தொகு]இமாலயப் பழுப்பு கரடிகளின் உடல் பருமன் பாலினரீதியாக வேறுபாடு கொண்டது. ஆண் கரடிகள் 1.5மீ இருந்து 2.2மீட்டர் (4 அடி 11 அங்குலம் - 7 அடி 3 அங்குலம்) நீளமுடையவை. பெண் கரடிகள் 1.37 மீட்டர் முதல் 1.83 மீட்டர் (4 அடி 6 அங்குலம் - 6 அடி) வரை இருக்கும். இவைதான் இமயமலையில் வாழக்கூடிய பெரிய விலங்குகள் ஆகும்.
பரவல்
[தொகு]இந்த கரடிகள் நேபாளம், திபெத், வட இந்தியா, வடக்கு பாக்கித்தான் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை ஏற்கனவே பூட்டானிலிருந்து அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]இவை கரடிகள் அக்டோபர் காலகட்டத்தை ஒட்டிய காலத்தில் பனிக்கால உறக்கம் மேற்கொள்கினறன. ஏப்ரல், மே மாதங்களில் வெளிப்படுகின்றன. அதுவரை பொதுவாக இந்த கரடிகள் குகைகளில் உறக்கத்தை மேற்கொள்கின்றன.
உணவு
[தொகு]இமாலயப் பழுப்பு கரடிகள் அனைத்துண்ணி ஆகும். இவை புற்கள், வேர்கள், தாவரங்கள், பூச்சிகளையும், சிறிய பாலூட்டிகள், பழங்கள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. சில சமயம் ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. வயதுவந்த கரடிகள் சூரிய உதயத்திற்கு முன் அல்லது பிற்பகலின் போது சாப்பிடுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Japan Times, 18 September 2003.
- ↑ BBC News — Yeti's 'non-existence' hard to bear