உள்ளடக்கத்துக்குச் செல்

இன நல்லிணக்க நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன நல்லிணக்க நாள்
Racial Harmony Day
கடைப்பிடிப்போர்சிங்கப்பூர்
வகைமதச்சார்பற்றது
முக்கியத்துவம்1964 இன வன்முறைகளின் நினைவாக
நாள்21 சூலை
நிகழ்வுஆன்டுதோறும்

இன நல்லிணக்க நாள் (Racial Harmony Day) என்பது இனவாரியாக இணக்கமான நாடாக சிங்கப்பூரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நாளாகும். இது ஆண்டுதோறும் சூலை 21 இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் பெரும்பாலான நடவடிக்கைகள் மதக்குழுக்கள் உட்பட பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

1964 சூலை 21 அன்று சிங்கப்பூர் மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது நிகழ்ந்த இனக்கலவரத்தை நினைவுகூரும் முகமாக பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் முதன்முதலில் 1997 ஆம் ஆண்டில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 1964 கலவரத்தின் போது 22 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆகத்து 1965 இல் சிங்கப்பூரின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக 50கள் மற்றும் 60களில் ஏராளமான இனக்கலவரங்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன.[1] இன்று, மக்கள் சங்கம் மற்றும் சமூக மேம்பாட்டுப் பேரவைகள் உட்பட பல அமைப்புகளும் இந்நாளை நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றன.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Singapore, National Library Board. "Racial Harmony Day". eresources.nlb.gov.sg. Retrieved 17 August 2018.
  2. Han, Jamie; Loh, Pei Ying. "Racial Harmony Day". Singapore Infopedia. Retrieved 10 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன_நல்லிணக்க_நாள்&oldid=3003512" இலிருந்து மீள்விக்கப்பட்டது