இன்டோமெதாசின்
இன்டோமெதாசின் (Indometacin) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி , மாதவிடாய் வலி, தலைவலி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து அசிட்டிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து indomethasin போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]
வேறு வணிகப் பெயர்கள் |
---|
Indocin, Indocid, Indochron E-R,INDOMET and Indocin-SR.. |
மருத்துவப் பயன்பாடு
[தொகு]பொதுவாக திறந்த தமனி நாளம் மூடுதல், தொடர் ஒற்றைத்தலைவலி (Hemicrania continua), ஒற்றைத்தலைவலி, எலும்பு மூட்டுத்தேய்வு, தம்ப முள்ளந்தண்டழற்சி, கீல்வாதம், மாதவிடாய் வலி,முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு இன்டோமெதாசின் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர குறைப்பிரவசத்தைத் தாமதமாக்கல், பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்
[தொகு]இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் நெஞ்செரிவு, குடற்புண், கருப்பு நிறத்துடன் அல்லது குருதியுடன் வயிற்றுப்போக்கு, மூச்சு விடக் கடினம், குறைவாக சிறுநீர் கழித்தல், தசைச் சோர்வு ஆகும். இவற்றைத்தவிர வயிற்றுப் பொருமல், குருதிக்குழலிய விளைவுகள் (மாரடைப்பு, மூளைக் குருதியடைப்பு), தோல் நமைச்சல், காதில் ரீங்காரம், தலைச்சுற்று பக்க விளைவுகளும் இன்டோமெதாசின் பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்
[தொகு]இம்மருந்து குடற்புண், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்கள், உயர் குருதி அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]