உள்ளடக்கத்துக்குச் செல்

இன்ஃபோ பொறியியல் கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்ஃபோ பொறியியல் கல்வி நிறுவனம்
Other name
InfoEngg
வகைதனியார்
உருவாக்கம்2007
முதல்வர்முனைவர் என். கோட்டீஸ்வரன்
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்IIE
இணையதளம்http://www.infoengg.com

இன்ஃபோ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் (Info Institute of Engineering) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், கோவில்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE)] [1] அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் இது, கோவையில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2] இக்கல்லூரி 2007 இல் நிறுவப்பட்டதாகும். இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. [3]

துறைகள்

[தொகு]
  • குடிசார் பொறியியல் துறை
  • இயந்திர பொறியியல் துறை
  • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
  • தகவல் தொழில்நுட்பத் துறை
  • மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை
  • மேலாண்மை ஆய்வுகள் துறை
  • கணினி பயன்பாடுகள் துறை
  • அறிவியல் மற்றும் மானுடவியல் துறை

வழங்கப்படும் பாடங்கள்

[தொகு]

இளநிலைப் படிப்புகள்:

  • பி.இ. - குடிசார் பொறியியல்
  • பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல்
  • பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • பி.டெக்-தகவல் தொழில்நுட்பம்
  • பி.இ. - இயந்திரப் பொறியியல்

முதுநிலைப் படிப்புகள்:

  • எம்.சி.ஏ - கணினி பயன்பாடு
  • எம்பிஏ - வணிக மேலாண்மை
  • எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. - வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு
  • எம்.இ. - மின் ஆற்றல் மற்றும் செயலி
  • எம்.இ. - தொடர்பு அமைப்புகள்

ஆராய்ச்சிப் படிப்புகள்:

  • பி.எச்.டி - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.எச்.டி - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]