இந்து சர்க்கார்
இந்து சர்க்கார் | |
---|---|
இயக்கம் | மதூர் பண்டார்கர் |
தயாரிப்பு |
|
கதை | மதூர் பண்டார்கர் |
திரைக்கதை | மதூர் பண்டார்கர் அனில் பாண்டே சஞ்சய் சேல் (உரையாடல்) |
இசை | அனு மாலிக் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கெய்கோ நாகஹாரா |
படத்தொகுப்பு | தேவேந்திர முர்தேஷ்வர் |
வெளியீடு | சூலை 28, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹11 கோடி[1] |
இந்து சர்க்கார் (Indu Sarkar[2]) என்பது 2017 ஆண்டில் இந்தி மொழியில் வெளியான அரசியல் திகில் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.[3] படத்தின் கதை திரைக்கதை அனில் பாண்டே மற்றும் மதூர் பண்டார்கர் ஆகியோரால் எழுதப்பட்டது. சஞ்சய் சேல் உரையாடல்களை எழுதியுள்ளார். இப்படம் பண்டார்கர் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மெகா பாலிவுட் பிரைவேட் லிமிடெட் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியாவில் அவசர நிலை நிலவிய காலகட்டத்தைப் பின்னணியாக கொண்டு உடுக்கப்பட்டது. மதுரா பந்தர்கார் கூறியபடி படத்தின் கதையில் 70% கற்பனை மற்றும் 30% உண்மை.[4]
இப்படத்தில் திரைப்பட நட்சத்திரங்களான கீர்த்தி குல்ஹரி, நீல் நிதின் முகேஷ், அனுபம் கெர், டோட்டா ராய் சௌத்ரி, சுப்பிரியா வினோத் ஆகியோர் நடித்திருந்தனர்.[5] இசையமைப்பு அனு மாலிக் மற்றும் பப்பி லஹரி ஆகியோர். இப்படம் 2017 சூலை 28 அன்று வெளியானது .[6][7][8][9][10][11][12][13][14][15][16][17]
பாத்திரம்
[தொகு]- கீர்த்தி குலரி (இந்து சர்கார்)
- டோட்டா ராய் சௌத்ரி (நவீன் சர்கார்)
- நீல் நிதின் முகேஷ் (சஞ்சை காந்தி)
- சுப்பிரியா வினோத் (இந்திரா காந்தி)
- ரஷ்மி ஜா (ஃபர்ஸனா)
- அனுபோம் கெர் (நனாஜி பிரதான்)
- ஷீபா சாதா(மேகலா)
- மானவ் விஜய் (காவல் ஆய்வாளர் சோதி)
- பரிவின் தாபாஸ்
கதை
[தொகு]கதையின் நாயகியான இந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவள், திருமணத்துக்குப் பிறகு இந்து சர்க்கார் ஆகிறாள். அவளுடைய கணவன் நவீன் சர்க்கார், மத்திய அரசின் ஊழியர்களில் ஒருவன். இந்நிலையில், அவசர நிலைக்காலத்தில் அவர்கள் வாழும் பகுதிக்குப் பக்கத்தில் உள்ள குடியிருப்பை, நகரை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக அரசால் தரைமட்டமாக்கப்படுகிறது. அப்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படும் கலவரத்தில் இரண்டு குழந்தைகள் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற முயல்கிறாள் இந்து. அவளின் அந்த நல்லெண்ண செயலே, அவளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கும், நெருக்கடி நிலைக்கு எதிராக அவள் போராடுவதற்கும் காரணமாக அமைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhur Bhandarkar's Indu Sarkar has a 100 crore budget, to release at 800 screens". Bollywood Hungama. 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 28 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Madhur Bhandarkar shares 'intense' first look of 'Indu Sarkar' - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/madhur-bhandarkar-shares-intense-first-look-of-indu-sarkar/articleshow/57873801.cms.
- ↑ "Indu Sarkar: Who is playing Sanjay Gandhi, Indira Gandhi and more, complete list of who's who in the film".
- ↑ "தேசத்தின் எதிரி அல்ல, அரசாங்கத்தின் எதிரி! - இந்து சர்க்கார் (இந்தி)". திரைப் பார்வை. தி இந்து. 4 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2017.
- ↑ "Meet the actress who plays Indira Gandhi in Madhur Bhandarkar's 'Indu Sarkar'".
- ↑ "Controversial film Indu Sarkar on Emergency set to hit screens with few cuts". Oneindia. 25 July 2017. http://www.oneindia.com/india/controversial-film-indu-sarkar-on-emergency-set-hit-screens-2504828.html. பார்த்த நாள்: 29 July 2017.
- ↑ "Madhur Bhandarkar’s ‘Indu Sarkar’ gets a release date" (in en). http://www.hindustantimes.com/. http://www.hindustantimes.com/videos/entertainment/madhur-bhandarkar-s-indu-sarkar-gets-a-release-date/video-o0IAoeFZj0dPi24NoCJbTI.html.
- ↑ "Indu Sarkar first poster: Kirti Kulhari dons an intense look for the film on Emergency" (in ஆங்கிலம்). 5 June 2017.
- ↑ "Madhur Bhandarkar releases the first poster of Indu Sarkar" (in en). filmfare.com. http://www.filmfare.com/news/madhur-bhandarkar-releases-the-first-poster-of-indu-sarkar-21204.html.
- ↑ "Indu Sarkar: Madhur Bhandarkar's film on 1975 Emergency to release on 28 July". Firstpost. 27 May 2017. http://www.firstpost.com/sports/indu-sarkar-madhur-bhadarkars-film-on-1975-emergency-to-release-on-28-july-3487045.html.
- ↑ "Neil Nitin Mukesh Wraps Up Shooting For Indu Sarkar". News18. http://www.news18.com/news/movies/neil-nitin-mukesh-wraps-up-shooting-for-indu-sarkar-1418277.html.
- ↑ "Indu Sarkar poster: Kirti dons an intense look for the film | Bollywood.com News" (in en). www.bollywood.com இம் மூலத்தில் இருந்து 2017-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170728113905/http://www.bollywood.com/celebrities/madhur-bhandarkar/news/indu-sarkar-poster-kirti-dons-intense-look-film.
- ↑ "आपातकाल के मंजर को बयां करती मधुर भंडारकर की फिल्म 'इंदू सरकार' का पोस्टर रिलीज". 5 June 2017.
- ↑ Staff, Scroll. "Manmohan Singh biopic starring Anupam Kher will lay bare the workings of the PMO".
- ↑ "Indu Sarkar: Madhur Bhandarkar Unveils The First Look From His Upcoming Film - NDTV Movies" (in en). NDTVMovies.com. 27 March 2017. http://movies.ndtv.com/bollywood/indu-sarkar-madhur-bhandarkar-unveils-the-first-look-from-his-upcoming-film-1673998.
- ↑ "Madhur Bhandarkar’s next film Indu Sarkar is about the 1975 Emergency" (in en). http://www.hindustantimes.com/. 19 February 2017. http://www.hindustantimes.com/bollywood/madhur-bhandarkar-s-next-film-indu-sarkar-is-about-the-1975-emergency/story-K76tFnIvqsyoLinfaT5uhN.html.
- ↑ "Indu Sarkar release date out: Its an Emergency this July". http://indiatoday.intoday.in/story/indu-sarkar-release-date-out/1/920927.html.