இந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்)
இந்தி எதிர்ப்புப் பாடல்கள் | |
---|---|
நூல் பெயர்: | இந்தி எதிர்ப்புப் பாடல்கள் |
ஆசிரியர்(கள்): | பாரதிதாசன் |
வகை: | இலக்கியம் |
துறை: | மொழி அரசியல் |
மொழி: | தமிழ் |
பதிப்பு: | மு.பதிப்பு 1948 |
இந்தி எதிர்ப்புப் பாடல்கள் என்னும் தொகுப்பு பாரதிதாசன் என்னும் புனைப்பெயரைக்கொண்ட கனக.சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரை உடைய கவிஞரால் முதலிரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் பொழுது எழுதப்பட்ட 12 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு ஆகும். சென்னை மாகாணத்தில் 1937ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாம் இந்தி எதிர்ப்புப் போரின்பொழுது எழுத்தப்பட்ட, ‘எல்லாரும் வாருங்கள்’ என்னும் ஒரு பாடலும் [1] 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் இந்தி எதிர்புப் போரின் பொழுது எழுதப்பட்ட 11 பாடல்களும் இத்தொகுப்பில் இருக்கின்றன. இவற்றுள் உள்ள 12 பாடல்களில் சில குயில் இதழில் வெளிவந்தவை ஆகும். வேறு சில இத்தொகுப்பிற்காகவே எழுதப்பட்டவை ஆகும்.[1]
இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் இசை, தாளம் ஆகிய குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நூலை வாங்குவோர் பாடல்களைப் படித்துவிட்டு நூலைப் போட்டுவிடாமல், சுரப்படுத்திப் பாடுவதோடு பிறரையும் பாடப் பயிற்றுவிக்க வேண்டும் என நூலில் முன்னுரையில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.[1]
பாடல்கள்
[தொகு]இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பின்வருமாறு:
வ.எண் | பாடல் தலைப்பு | இராகம் | தாளம் | மெட்டு | வடிவம் | குறிப்பு |
01 | இந்தி எதிர்த்திட வாரீர்! | நாதநாம கிரியை | ஆதி | ஆனந்தக் களிப்பு | சிந்துக் கண்ணிகள் | ஒரு எடுப்பும் நான்கு கண்ணிகளும் கொண்டது |
02 | இந்தியா கட்டாயம்? | சகானா | திஸ்ரகதி | சிந்துக் கண்ணிகள் | நான்கு கண்ணிகள் கொண்டது | |
03 | இந்தி எதிர்ப்பு முரசு | இங்கிசீசு டியூன் | திஸ்ரகதி | 29 மேளம் தீரசங்கராபரண ஜன்யம் | கண்ணிகள் | 8 கண்ணிகள் கொண்டது. |
04 | எழுக! | மணிரங்கு | சதுஸ்ரதிரிபுடை | 22ஆவது மேளம் கரகரப்ரியாவில் ஜன்யம் | கண்ணிகள் | ஈரடி எடுப்பு, ஈரடி உடனெடுப்பு, மூன்றடிகள் கொண்டது. |
05 | எல்லாரும் வாருங்கள்! | சிந்துக் கண்ணிகள் | எட்டு கண்ணிகள் கொண்டது. முதலாவது இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது இயற்றப்பட்டது. | |||
06 | பார்க்கட்டும் | சிவரஞ்சனி | திஸ்ரகதி ஏகதாளம் | 22ஆவது மேளம் கரகரப்ரியாவில் ஜன்யம் | சிந்துக் கண்ணிகள் | 16 கண்ணிகள் கொண்டது |
07 | இந்தி ஒழிப்பதும் கட்டாயம் | தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே | சிந்துக் கண்ணிகள் | 24 கண்ணிகள் கொண்டது | ||
08 | பிள்ளைகள் சொத்து தாய்மொழிக்கே | ஆறுமுக வடிவேலவனே | காவடிச் சிந்து | 4 கண்ணிகள் கொண்டது. | ||
09 | இந்தி எதிர்ப்பார் இயம்பும் உறுதிப்பாடு | எண்சீர் விருத்தம் | 2 விருத்தங்கள் கொண்டது. | |||
10 | வடமொழி எதிப்பு | எண்சீர் விருத்தம் | 3 விருத்தங்கள் | |||
11 | இந்திக்கு உன் திறம் காட்டு | நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நா திந்திநா நாதந்தி நாதந்தி நா | வண்ணம் | 7 கண்ணிகள் கொண்டது. | ||
12 | இந்தி எதிர்ப்பார் மேற்கொள்ளும் உறுதிப்பாடு | எண்சீர் விருத்தம் | 2 விருத்தங்கள் கொண்டது. |