இந்திரா காந்தி பல்கலைக்கழகம், ரேவாரி
குறிக்கோளுரை | Sa Vidya Ya Vimukte |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 2013 |
வேந்தர் | அரியானா ஆளுநர் |
துணை வேந்தர் | எஸ். கே. காகர்[1] |
அமைவிடம் | மீராப்பூர், ரேவாரி , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
இந்திரா காந்தி பல்கலைக்கழகம், ரேவாரி (Indira Gandhi University, Rewari) என்பது 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி, மீர்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது அரியானா அரசால் 2013-ல் நிறுவப்பட்டது.
வரலாறு
[தொகு]1988-ல் நிறுவப்பட்ட மகரிசி தயானந்த பல்கலைக்கழகத்தின் முதுகலை மண்டல மையம் இந்திரா காந்தி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இது 2013ஆம் ஆண்டின் அரியானா சட்டம் எண்.29இன் கீழ் நிறுவப்பட்டது. செப்டம்பர் 13, 2013-ல்[2] இப்பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது.
வளாகம்
[தொகு]பல்கலைக்கழக வளாகம் சுமார் 100 ஏக்கர்கள் (40 ha) சுமார் 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) ) தொலைவில் மீர்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வளாகம் ரேவாரியிலிருந்து 13 கி. மீ. தொலைவிலும்சண்டிகரிலிருந்து 300 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]
கல்விப் பிரிவு
[தொகு]பல்கலைக்கழகத்தில் பின்வரும் கல்விப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளது:[3]
- மானுடவியல்
- சமூக அறிவியல்
- இயற்பியல் அறிவியல்
- உயிர்அறிவியல்
- கல்வியியல்
- சட்டம்
- வணிகவியல், மேலாண்மை மற்றும் சுற்றுலா மேலாண்மை
- மருந்து அறிவியல்
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
- பூமி, சுற்றுச்சூழல் & விண்வெளி அறிவியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vice Chancellor". igu.ac.in. Archived from the original on 27 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "About IGU". Indira Gandhi University Meerpur, Rewari. Archived from the original on 25 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Academic Structure" (PDF). Indira Gandhi University Meerpur, Rewar. Archived from the original (PDF) on 22 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)