இந்திரா அனந்த் மேதியோ
இந்திரா அனந்த் மேதியோ Indira Anant Maydeo | |
---|---|
முதலாவது மக்களவை உறுப்பினர்-புனே | |
பதவியில் 1951–1957 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | நாராயணன் கணேஷ் கோர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 செப்டம்பர் 1903 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இந்திரா அனந்த் மேதியோ (Indira Anant Maydeo) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக முதலாவது மக்களவையில் புனே மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]1903ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்த மேதியோ பெர்க்குசன் கல்லூரியில் பயின்றார். இங்கிருந்து இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[1]
தொழில்
[தொகு]மேதியோ இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். 1933-ல், இவர் அரிஜன் சேவா சங்கத்தின் மகாராட்டிரா பிரிவில் சேர்ந்தார்.[1] இவர் புனேவில் (அப்போது பம்பாய் மாநிலத்தில் ) கட்சியின் மிக முக்கியமான பெண் உறுப்பினராக இருந்தார். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோது, இந்தியத் தேசிய காங்கிரசு மேதியாவினை புனே தெற்கு மக்களவைத் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக்கியது. மேதியோ சுமார் 64% வாக்குகளைப் பெற்று சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் சிறீதர் லிமாயேவை தோற்கடித்து புனேவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3] இந்த சாதனையை இன்னும் வைத்திருக்கிறார்.[2] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், விவாகரத்து தொடர்பான மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். ஆனால் இந்த விவாதிக்கப்படாமலே இறுதியில் காலாவதியானது. மேதியோ 1952-ல் இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவரானார்.[1]
மண வாழ்க்கை
[தொகு]இந்திரா 1927-ல் அனந்த் கோவிந்த் மேதியோவை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு குழந்தைகள் இருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile: Maydeo, Shrimati Indira Anant". மக்களவை (இந்தியா). Retrieved 20 November 2017.
- ↑ 2.0 2.1 "1951: When Pune elected a woman — Indirabai Maydeo — to first Lok Sabha". http://indianexpress.com/article/cities/pune/1951-when-pune-elected-a-woman-indirabai-maydeo-to-first-lok-sabha/. பார்த்த நாள்: 20 November 2017.
- ↑ D.G., Supriya (16 January 2014). "Vinita Deshmukh: From Journalism to Politics". NRI Pulse. Retrieved 20 November 2017.