இந்திய விரைவு அஞ்சல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இந்திய அஞ்சல் துறை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய விரைவு அஞ்சல் (speed post) என்பது இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றாகும். இது 1986 ஆகஸ்டு மாதத்தில் துவங்கப்ட்டது. இந்தியாவுக்குள் மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் பொருட்களை அனுப்ப இச்சேவை உதவுகிறது. எல்லா வாடிக்கையாளர்களும் தங்கள் அஞ்சல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்று இணையத்தில் சோதித்துக்கொள்ளும் வசதி, விரைவு அஞ்சல் கணக்கு வைத்துக் கொள்ளும் வசதி, விரைவு அஞ்சல் வழி கடவுச் சீட்டு பெறும் வசதி உள்ளிட்ட பல வசதிகளைத் தருகிறது. மேலும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்காக அலுவலகத்திற்கே வந்து தபால்களைப் பெறும் வசதியையும் இது தருகிறது.
விரைவு அஞ்சலில் அனுப்பப்படும் பொருளின் எடைக்கான உச்ச வரம்பு 35 கிலோ ஆகும். தங்க நாணயம், நகை, விலைஉயர்ந்த கற்கள் போன்றவற்றையும் விரைவு அஞ்சலில் அனுப்பலாம். அவ்வாறு அனுப்ப வேண்டுமாயின் அப்பொருட்களின் காப்பீட்டு மதிப்பு ஒரு இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வெளி இணைப்புகள்
[தொகு]தமிழக அஞ்சல் வட்டத்தின் விரைவு அஞ்சல் சேவைக்கான இணையதளம்
விரைவு அஞ்சல் சேவைக்கான இந்திய அஞ்சல் துறையின் இணையதளம் பரணிடப்பட்டது 2011-01-02 at the வந்தவழி இயந்திரம்