இந்திய மாநிலக் கொடிகளின் பட்டியல்
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தனிப்பட்டக் கொடிகள் எதுவும் இல்லை. [1] மாநிலங்கள் தங்களுக்கென தனித்துவமான கொடிகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கத்தக்க சட்டப்பூர்வ தடைகள் எதுவும் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும்) சட்டம், 1950 அல்லது தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகியவற்றில் இல்லை. 1994 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில், நடந்த எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கில், ஒரு மாநிலம் தனக்கெனக் கொடி வைத்திருப்பதற்கு இந்திய அரசியலமைப்பில் எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், ஒரு மாநிலக் கொடியானது தேசியக் கொடியை அவமதிப்பதாக இருக்கக் கூடாது. [2] இந்தியக் கொடிச் சட்டத்தின்படி, இந்திய தேசியக் கொடியுடன் மற்ற கொடிகளையும் பறக்கவிடலாம், ஆனால் அதே கொடிக் கம்பத்தில் அல்லது தேசியக் கொடியை விட உயரமாக பறக்கவிடக்கூடாது. [3]
முன்னாள் அதிகாரப்பூர்வ மாநிலக் கொடிகள்
[தொகு]இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தின்படி, அந்த மாநிலம் 1952 முதல் 2019 வரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கொடியைக் கொண்டிருந்தது.
கொடி | நிலை | பயன்பாட்டு தேதி | விளக்கம் |
---|---|---|---|
![]() |
ஜம்மு காஷ்மீர்
|
1947–1952 | நடுவில் கலப்பையுடன் கூடிய சிவப்பு நிறக் கொடி. சிவப்பு பின்னணி உழைப்பையும், கலப்பை வேளாண்மையையும் குறித்தது. கொடியின் விகிதம் 3:2 ஆக இருந்தது. |
![]() |
1952–2019 | கொடி சிவப்பு நிறத்தில் இருந்தது, அதில் மூன்று வெள்ளை செங்குத்து கோடுகளும், ஒரு கலப்பையும் இருந்தன. சிவப்பு பின்னணி உழைப்பைக் குறிக்கிறது, கோடுகள் மாநிலத்தின் மூன்று நிர்வாகப் பிரிவுகளை ( ஜம்மு, காஷ்மீர் இலடாக்கு ) குறிக்கின்றன, கலப்பை வேளாண்மையைக் குறிக்கிறது. கொடியின் விகிதம் 3:2 ஆக இருந்தது. [4] |
1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ் நாட்டுக் கொடிக்கான வடிவமைப்பை முன்மொழிந்தது [5]
கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டில் கருநாடகக் கொடிக்கான வடிவமைப்பாக பாரம்பரிய மஞ்சள்-சிவப்பு நிறத்திலான இரு நிறங்களை அடிப்படையாகக் கொண்ட கன்னடக் கொடியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டக் கொடியை முன்மொழிந்தது. அது நடுவில் வெள்ளை பட்டையும் சின்னமும் கூடிய புதிய மூவர்ணக் கொடியாகவும், பிராந்திய அரசியல் கட்சிகளிடமிருந்து தன்னை வேறுபடித்திக் வைத்துக்கொண்டு இந்திய தேசியக் கொடியின் அமைப்பைப் பின்பற்றுவதாகவும் வடிவமைக்கப்பட்டது. 2019 ஆகத்தில், அதிகாரப்பூர்வ மாநிலக் கொடிக்கான திட்டத்தை இனி அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றப் போவதில்லை என்று கருநாடக அரசு அறிவித்தது. [6] அதிகாரப்பூர்வமற்ற கன்னடக் கொடியும் மாநிலத்திற்குள் பிரபலமாக உள்ளது.
கொடி | நிலை | முன்மொழிவு தேதி | விளக்கம் |
---|---|---|---|
![]() |
2018 | மஞ்சள், வெள்ளை, சிவப்பு சிறங்களைக் கொண்ட மூவர்ணக் கொடி, வெள்ளைப் பட்டையின் மையத்தில் கருநாடகத்தின் சின்னம் . | |
![]() |
1970 | ஒரு மூலையில் இந்தியக் கொடியும், நடுவில் தமிழ்நாட்டின் சின்னமும் கொண்ட சாம்பல் நிறக் கொடி. |
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பதாகைகள்
[தொகு]ஒரு மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தைக் குறிக்க தனித்துவமான ஒரு பதாகை தேவைப்படும்போது, அந்த மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் சின்னம் பொதுவாக வெள்ளை அல்லது நீல நிறப் பின் புலத்தில் காட்டப்படும். [7] [8] [9]
மாநிலங்கள்
[தொகு]-
சத்தீசுகரின் பதாகை
-
அரியானாவின் பதாகை
-
இமாச்சலப் பிரதேச பதாகை
-
சார்க்கண்டின் பதாகை
-
மத்தியப் பிரதேச பதாகை
-
மகாராட்டிர பதாகை
-
மணிப்பூரின் பதாகை
-
மேகாலயாவின் பதாகை
-
ஒடிசாவின் பதாகை
-
பஞ்சாபின் பதாகை
-
திரிபுராவின் பதாகை
-
Banner of உத்தரப் பிரதேச பதாகை
-
மேற்கு வங்காள பதாகை
ஒன்றியப் பிரதேசங்கள்
[தொகு]-
சண்டிகரின் பதாகை
-
ஜம்மு காஷ்மீரின் பதாகை
-
லட்சத்தீவின் பதாகை
மேலும் காண்க
[தொகு]- இந்திய தேசியக் கொடி
- இந்திய தேசியக்கொடி சட்டம்
- இந்திய மாநில சின்னங்களின் பட்டியல்
- இந்திய மாநில சின்னங்களின் பட்டியல்
- இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்
- இந்திய மாநிலப் பறவைகளின் பட்டியல்
- இந்திய மாநில மலர்களின் பட்டியல்
- இந்திய மாநில மரங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian States". crwflags.com. Archived from the original on 26 August 2019. Retrieved 12 September 2019.
- ↑ "Non-NDA states playing emblem politics to cover up their failure". 14 July 2018. Archived from the original on 22 March 2020. Retrieved 22 March 2020.
- ↑ "Flag Code of India - Wikisource, the free online library". en.wikisource.org. Archived from the original on 26 August 2019. Retrieved 12 September 2019.
- ↑ Haynes, Ed (24 September 1996). "Jammu and Kashmir (India)". Flags of the World. Archived from the original on 24 November 2010. Retrieved 22 October 2010.
- ↑ "When Tamil Nadu proposed a State flag nearly five decades ago". Archived from the original on 23 May 2018. Retrieved 22 May 2018.
- ↑ "Karnataka govt will not pursue demand for separate state flag: Minister CT Ravi". 30 August 2019. Archived from the original on 17 May 2021. Retrieved 3 November 2020.
- ↑ Ben Cahoon. "Indian states since 1947". worldstatesmen.org. Archived from the original on 17 May 2020. Retrieved 12 September 2019.
- ↑ "Vexilla Mundi". vexilla-mundi.com. Archived from the original on 3 April 2022. Retrieved 12 September 2019.
- ↑ Lepcha. "Arunachal: New Pema Khandu govt to revamp education, law & order" இம் மூலத்தில் இருந்து August 3, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200803073339/https://www.eastmojo.com/amp/story/arunachal-pradesh%2F2019%2F06%2F03%2Farunachal-new-pema-khandu-govt-to-revamp-education-law-order.