உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய புற்றுநோய் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய புற்றுநோய் சங்கம்
Indian Cancer Society
உருவாக்கம்1951; 73 ஆண்டுகளுக்கு முன்னர் (1951)
நிறுவனர்தராப் இயகாங்கிர் சூசவல்லா மற்றும் நேவல் டாட்டா
வகைஅரசு சார்பற்ற அமைப்பு
சேவை
இந்தியா

இந்திய புற்றுநோய் சங்கம் (Indian Cancer Society) ஓர் அரசு சாரா சங்கமாகும். இச்சங்கம் இந்தியாவிலுள்ள புற்றுநோயாளிகளிடத்தில் இலாப நோக்கமற்று விழிப்புணர்வூட்டல், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தேசிய அமைப்பாகும்.

நேவல் டாடாவின் முன்முயற்சியின் காரணமாக 1951 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற புற்றுநோயியல் நிபுணர், மருத்துவர் . டி.யே. சூச்சாவல்லா என்பவரை முன்னிறுத்தி தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் தன்னார்வ, இலாப நோக்கற்ற சங்கமாக இது நிறுவப்பட்டது. புற்றுநோய் விழிப்புணர்வு, புற்றுநோய் கண்டறிதல் மற்றும் இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை சங்கத்தின் நோக்கங்களாக இருந்தன. [1]

இந்திய புற்றுநோய் சங்கம் இந்தியா முழுவதும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஒரு முன்னோடி நிறுவனமாகும். மும்பையில் தலைமை அலுவலகத்துடன் கூடிய வசதிகள் 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது [2] மேலும் தில்லியிலும் ஒரு கிளை 1983 ஆம் ஆண்டு கே.கே மேத்தாவின் உத்தரவின் பேரில் நிறுவப்பட்டது. சர் ரத்தன் டாடா அறக்கட்டளை , ஏஎச் வாடியா அறக்கட்டளை, பிரோச்சா கோத்ரேச்சு அறக்கட்டளை போன்ற பல பிரபல அறக்கட்டளைகள் புற்றுநோயாளிகளுக்கு குறைந்தபட்ச செலவில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க இச்சங்கத்துடன் தொடர்பு கொண்டு உதவின. [3] இந்திய புற்றுநோய் சங்கம் டாடா நினைவு மருத்துவமனையுடன் தொடர்புடையதாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு திட்டங்களை வழங்கும் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாக இம்மருத்துவமனை கருதப்படுகிறது. [4] இவர்கள் இந்தியாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகளின் வகைகளை ஆய்வு செய்து தரவுகளையும் வெளியிடுகின்றனர். [5] [6] [7]

இந்தியாவின் தேசிய புற்று நோய் எதிர்ப்பு சங்கமான இந்திய புற்றுநோய் சங்கம் , பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950 கீழும் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 இன் கீழும் பதிவுசெய்யப்பட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய சங்கமாக 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] நிறுவனம் முதலாவதாகவும் அதன் வகையில் ஆசியாவில் மிகப் பெரிய சங்கமாகவும் இருந்தது. இச்சங்கம் ஒரு மறுவாழ்வு முகாமையும் மும்பையில் 1958 ஆம் ஆண்டு அமைத்தது. [2] சமுதாயத்தின் செயல்பாடுகளில் ஏழை புற்றுநோயாளிகளுக்கு உணவு, மருந்துகள், போக்குவரத்து, செயற்கை உறுப்புகள், பெருங்குடல் திறப்பு பைகள், ஆலோசனை சேவைகள், சமூக நலன் மற்றும் வேலை வாய்ப்பு சேவைகள் மற்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கு சுய வேலைவாய்ப்பில் உதவுதல் ஆகியவை இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆகும். [2] புற்றுநோய்க்கான காரணிகள் குறித்து பொது மக்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டங்களையும், மருத்துவர்களுக்கு பொருத்தமான கல்வி பயிற்சிகளையும் கூடுதலாக இச்சங்கம் நடத்துகிறது. [2]

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிக் எப் எம் மற்றும் இந்திய புற்றுநோய் சங்கம் ஆகியவை இணைந்து 'புற்றுநோய்க்கு எதிராக' ஒரு மாத கால பிரச்சார இயக்கத்தைத் தொடங்கின. இவ்வியக்கம் பயங்கரமான புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், கோவிட் தொற்றுநோய்களின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Indian Cancer Society
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Indian Journal of Cancer". Indian Journal of Cancer. 2007. https://www.indianjcancer.com/ics.asp. "Indian Journal of Cancer". Indian Journal of Cancer. 2007. Retrieved 29 March 2021.
  3. "Supports and Partners". Archived from the original on 2019-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
  4. "Cancer patients ride high on horse therapy at Mahalaxmi Race Course". 4 February 2017. http://www.asianage.com/metros/mumbai/040217/cancer-patients-ride-high-on-horse-therapy-at-race-course.html. 
  5. "Cancers of liver, pancreas, gall bladder rose in Mumbai in". 31 January 2017. http://www.business-standard.com/article/pti-stories/cancers-of-liver-pancreas-gall-bladder-rose-in-mumbai-in-117013101120_1.html. 
  6. "Awareness and early detection of breast cancer can reduce the need for chemotherapy". 4 February 2017. http://www.hindustantimes.com/mumbai-news/awareness-and-early-detection-of-breast-cancer-can-reduce-the-need-for-chemotherapy/story-aDGDrRGXHFCfVekK8VipjO.html. 
  7. "ICS launches campaign for early detection of cancer in women". 2019-02-05. https://www.thehindu.com/news/cities/mumbai/ics-launches-campaign-for-early-detection-of-cancer-in-women/article26178739.ece. 
  8. "Big FM associates with Indian Cancer Society once again for its campaign ‘Together against Cancer’" (in en). National Herald. 29 September 2020. https://www.nationalheraldindia.com/india/big-fm-associates-with-indian-cancer-society-once-again-for-its-campaign-together-against-cancer.