இந்திய நீதிக் கட்சி
Appearance
இந்திய நீதிக் கட்சி (IJP) | |
---|---|
தலைவர் | உதித் ராஜ் |
தொடக்கம் | 9 திசம்பர் 2012 |
கலைப்பு | 24 பிப்ரவரி 2014 |
தலைமையகம் | 5, பூசா சாலை, 3வ்து மாடி, கரோல் பாக், புது தில்லி, இந்தியா 110005 |
கொள்கை | சமூக ஜனநாயகம் தலித் பொதுவுடைமை |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி [1] |
இந்தியா அரசியல் |
இந்திய நீதிக் கட்சி (INDIAN JUSTICE PARTY-IJP) என்ற அரசியல் கட்சியானது உதித் ராஜ் என்பவரால் 2003ல் நிறுவப்பட்டது. இவர் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியாக பணியாற்றினார். 2003ல் இந்திய நீதிக் கட்சியை உருவாக்க அவர் தனது பதவியைப் பணித்துறப்பு செய்துவிட்டார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பு
[தொகு]பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவராகவும் நிறுவனராகவும் இருந்த உதித்ராஜ் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் திரு.ராஜ்நாத் சிங் முன்னிலையில் 2014 பிப்ரவரி 24ஆம் நாள் பாரதிய ஜனதா கட்சியுடன் தனது கட்சி இணைப்பின் அறிவிப்பை வெளியிட்டார். ஆட்சியிலும், நாட்டை வழிநடத்துவதிலும் தலித் வகுப்பினர்களின் பங்கு குறித்து பாரதிய ஜனதா கட்சியினருடன் பேசிய பின் அக்கட்சியில் இணைந்ததாக உதித் ராஜ் கூறினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-24. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
- ↑ Dalit leader Udit Raj joins BJP, 25 February 2014
வெளி இணைப்புகள்
[தொகு]- BSP secretary joins Indian Justice Party பரணிடப்பட்டது 2004-05-26 at the வந்தவழி இயந்திரம்