இந்திய சேவகர்கள் சங்கம்


இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்பது தக்காண கல்விச் சங்கத்தை விட்டு வெளியேறிய கோபால கிருஷ்ண கோகலே 1905 ஆம் ஆண்டு சூன் 12 ஆம் தேதி மகாராட்டிடிராவின் புனேவில் உருவாக்கிய ஓர் சங்கமாகும்.[1]. இவருடன் சமூக மற்றும் மனித வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியை அகற்றவும் விரும்பிய நடேசு அப்பாஜி திராவிட், கோபால கிருஷ்ணா தியோதர் மற்றும் அனந்த் பட்வர்தன் போன்ற படித்த ஒருசில இந்தியர்களும் இருந்தனர்.
நோக்கம்
[தொகு]கல்வி, சுகாதாரம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும், தீண்டாமை மற்றும் பாகுபாடு, குடிப்பழக்கம், வறுமை, பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் உள்நாட்டு துஷ்பிரயோகம் ஆகியவற்றின் சமூக தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் இந்த சங்கம் பல பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தது. நாக்பூரிலிருந்து தி கிட்டாவாடா என்ற ஆங்கில பத்திரிக்கை 1911 இல் தொடங்கியது. முக்கிய இந்தியர்கள் அதன் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் இருந்தனர். அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு போன்ற அமைப்புகளிலிருந்து விலகி இருக்க அது முடிவு செய்தது.
அமைப்பு
[தொகு]1915 இல், கோகலே இறந்த பின்னர் சங்கத்தின் அடிப்படை சுருங்கியது, 1920 களில் மகாத்மா காந்தி காங்கிரசின் தலைவர் ஆனவுடன், நாடு முழுவதும் பொதுமக்கள் அளவில் சமூக சீர்திருத்த பிரச்சாரங்களை ஆரம்பித்து, இளம் இந்தியர்களை ஈர்த்தார். இருப்பினும், இது ஒரு குறைவான உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் இதன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறது. இது மகாராட்டிடிராவின் புனே நகரில் அதன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
கிளைகள்
[தொகு]
இது உத்தரப் பிரதேசம், ஒடிசா, அலகாபாத் மற்றும் உத்தராகண்டம் போன்ற பல்வேறு மாநிலங்களில் அதன் கிளைகளைக் கொண்டுள்ளது. இது தொடக்கப் பள்ளிகள், பழங்குடியின சிறுவர்களுக்கான குடியிருப்பு விடுதி, பழங்குடிப் பெண்களுக்கான ஆசிரம வகை பள்ளிகள், குழைந்தை மையங்கள் போன்றவற்றை கவனித்து வருகிறது. ஒடிசாவில் கட்டக், சவுத்வார் மற்றும் ராயகடாவிலும் இதன் மையங்கள் உள்ளன. [2] இது ஒடிசாவில் ஒரு அனாதை இல்லத்தையும் நடத்துகிறது.