இந்திய சிந்தி மொழியியல் நிறுவனம்
உருவாக்கம் | 1989 |
---|---|
பணிப்பாளர் | சாகிப் பிஜ்ஜானி |
அமைவிடம் | அதிபூர் , , |
Acronym | IIS |
இணையதளம் | www |
இந்திய சிந்தி மொழியியல் நிறுவனம் (Indian Institute of Sindhology) என்பது சிந்தி மொழி, இலக்கியம், கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான துறைகளில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான மையமாகும். சிந்தி சமூகத்தின் பண்பாட்டு மரப்ய்வளத்தினைப்பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தி இளைய தலைமுறையினரிடம் இதைப் பரப்புவதன் மூலம் சிந்தி மொழியின் தொடர்ச்சியை உறுதி செய்வது இதன் முதன்மை நோக்கமாகும்.[1]
இந்த அமைப்பு ஏற்கனவே சிந்தி கலாச்சார நெறிமுறைகளின் பழைய இலக்கிய வளங்களைப் பரப்பும் பணியில் உள்ளது. இது இதற்காகத் தனது செயலில் உள்ள பள்ளியைக் கொண்டுள்ளது. இது அமைப்பின் கட்டிடத்தின் தனிப் பிரிவில் இப்பள்ளிச் செயல்படுகிறது. கூடுதலாக, சிந்தி மொழியின் பதிவை வைத்திருக்க, முந்தைய காலத்தின் குறிப்பிடத்தக்கப் புத்தகங்களும், அமைப்பின் குழு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரித்து வரும் ஒலிப் பதிவுகளும் உள்ளன. அருங்காட்சியகமாகச் செயல்படும் உள் நூலகம்; அமைப்பு மற்றும் தோற்றத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய சிந்தி மொழியியல் நிறுவன நூலகத்தில் ஆயிரக்கணக்கான சிந்தி புத்தகங்கள் உள்ளன, அரிதான இந்த புத்தகங்கள் சிந்தி மொழியின் பல்வேறு தலைப்புகளில் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்படும் அனைத்து சிந்தி இதழ்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுச் சேகரிக்கப்படுகின்றன.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Protecting Sindhi culture". The Hindu (in Indian English). 20 December 2015.
- ↑ "Annual Report 2007-08" (PDF).
- ↑ "Indian Institute of Sindhology". Sindhishaan. Retrieved 2016-05-03.
- ↑ Shefalee Vasudev (2013-08-15). "The A, B, C, D of our DNA". Livemint. Retrieved 2016-05-03.
- ↑ "Indian Institute of Sindhology". Sindhlink.net. Archived from the original on 9 March 2016. Retrieved 2016-05-03.