இந்தியாவில் விளையாட்டு
வளைதடிப் பந்தாட்டம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய விளையாட்டாக உள்ளது. மேலும் இந்த நாடு வளைதடிப் பந்தாட்டத்தில் எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. எனினும் துடுப்பாட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. புது தில்லியில், 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற பிறகு, இந்தத் தலைநகரம் தற்போது நவீன விளையாட்டு வசதிகளைக் கொண்டு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இதே போன்ற வசதிகள் இந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1][2][3]
இதுவரை வளைதடிப் பந்தாட்டம் போட்டிகளில் ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கங்கள்
[தொகு]ஆண்டு | இறுதி ஆட்டம் | வெற்றியாளர் | இரண்டாவது |
1928 | இந்தியா எதிர் அணி நெதர்லாந்து 3-0 |
இந்தியா |
நெதர்லாந்து |
1932 | இந்தியா எதிர் அணி யப்பான் 11 - 1 |
இந்தியா |
யப்பான் |
1936 | இந்தியா எதிர் அணி ஜெர்மனி 8 - 1 |
இந்தியா |
ஜெர்மனி |
1948 | இந்தியா எதிர் அணி ஐக்கிய இராச்சியம் 4 - 0 |
இந்தியா |
ஐக்கிய இராச்சியம் |
1952 | இந்தியா எதிர் அணி நெதர்லாந்து 6 - 1 |
இந்தியா |
நெதர்லாந்து |
1956 | இந்தியா எதிர் அணி பாக்கித்தான் 1 - 0 |
இந்தியா |
பாக்கித்தான் |
1964 | இந்தியா எதிர் அணி பாக்கித்தான் 1 - 0 |
இந்தியா |
பாக்கித்தான் |
1980 | இந்தியா எதிர் அணி எசுப்பானியா 4 - 3 |
இந்தியா |
எசுப்பானியா |
பலவகையான விளையாட்டுகள் நாடு முழுவதும் விளையாடப்படுகிறது. இதில் கபடி, கோ-கோ, பெல்வானி மற்றும் கில்லி போன்றவை அடங்கும். பிரித்தானிய ஆட்சியின் போது காற்பந்தாட்டம், ரக்பி யூனியன், துடுப்பாட்டம், கோல்ஃப், டென்னிஸ், சுவர்ப்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் உள்ளிட்ட பல பிரபலமான விளையாட்டுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விளையாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MS Dhoni's record of winning three ICC trophies will stay forever". www.newindianexpress.com.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Roy, Ashim (May 2017). "GAMES & SPORTS IN ANCIENT INDIA".
- ↑ "Viewership record".