உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் ராம்சார் தளங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் 89 ராம்சர் தளங்கள் உள்ளன. [1] இவை ராம்சர் மாநாட்டின் கீழ் "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக" கருதப்படும் ஈரநிலங்கள் ஆகும். உலகெங்கிலும் உள்ள அனைத்து ராம்சார் தளங்களின் முழு பட்டியலுக்கு , சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களின் பட்டியலைப் பார்க்கவும்.

WWF-இந்தியாவின் கருத்துப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் ஈரநிலங்கள் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஒன்றாகும். தாவரங்களின் இழப்பு, உப்புத்தன்மை, அதிகப்படியான வெள்ளம், நீர் மாசுபாடு, ஆக்கிரமிக்ககூடிய இனங்கள், அதிகப்படியான வளர்ச்சி மற்றும் சாலை கட்டுமானம், அனைத்தும் நாட்டின் ஈரநிலங்களை சேதப்படுத்தியுள்ளன. [2] 2022 ஆம் ஆண்டில், கரிகிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை மார்ஷ் ரிசர்வ் வனம் & தமிழ்நாட்டிலிருந்து பிச்சாவரம் சதுப்புநிலம், மிசோரத்தில் இருந்து பாலா ஈரநிலம், மத்தியப் பிரதேசத்திலிருந்து சாக்யா சாகர் உள்ளிட்ட இருபத்தி ஆறு புதிய தளங்கள் சேர்க்கப்பட்டன. [3] ராம்சார் தளங்களின் பரப்பளவு சுமார் 1,083,322 ஹெக்டேர் ஆகும். [4] இந்தியாவிலேயே 14 ராம்சர் தளங்களுடன் தமிழ்நாடுதான் அதிக ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.

2014 வரை 26 ராம்சார் தளங்களே இந்தியா முழுவதும் இருந்தது. 2014ற்கு பிறகு இன்று வரை 49புதிய ராம்சார் தளங்கள் இந்தியா முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.[5][6]

மாநில வாரியாக தளங்களின் எண்ணிக்கை

[தொகு]

14 ஆகஸ்ட் 2024 முடிய இந்தியாவில் 85 ராம்சர் ஈர நிலங்கள் உள்ளது.[7] அவைகல் பின்வருமாறு:

மாநிலம்/யூ.டி தளங்களின் எண்ணிக்கை தளங்களின் பெயர்கள்
ஆந்திரப் பிரதேசம் 1 கொல்லேறு ஏரி
அசாம் 2 டீபோர் பீல்
பீகார் 1 கன்வார் ஏரி
கோவா 1 நந்தா ஏரி [8]
குஜராத் 4 கிஜாடியா, நல்சரோவர், தோல் ஏரி, வாத்வானா ஈரநிலம்
ஹரியானா 2 சுல்தான்பூர் தேசிய பூங்கா, பிந்தாவாஸ் வனவிலங்கு சரணாலயம்
ஹிமாச்சல பிரதேசம் 3 சந்திர தால், பாங் அணை ஏரி, ரேணுகா ஏரி
ஜம்மு காஷ்மீர் 5 ஹோக்கர்சர் சதுப்பு நிலம், ஹைகம் சதுப்பு நில பாதுகாப்பு ரிசர்வ், ஷால்பக் ஈரநில பாதுகாப்பு ரிசர்வ், சுரின்சார் - மன்சார் ஏரிகள், வுலர் ஏரி ,
கர்நாடகா 4 ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம், மகடி கெரே வளங்காப்பகம், அங்கசமுத்திரா பறவைகள் வளங்காப்பு சரணாலயம் [9]
கேரளா 5 அஷ்டமுடி சதுப்பு நிலம், சாஸ்தம்கோட்டா ஏரி, வேம்பநாடு-கோல் சதுப்பு நிலம்
லடாக் 2 டிசோ கார், சோமோரிரி ஏரி
மத்திய பிரதேசம் 45 போஜ் வெட்லேண்ட், சாக்யா சாகர், சிர்பூர் ஏரி, யஷ்வந்த் சாகர்
மகாராஷ்டிரா 3 லோனார் ஏரி, நந்தூர் மாதமேஷ்வர், தானே க்ரீக்
மணிப்பூர் 1 லோக்டாக் ஏரி
மிசோரம் 1 பாலா ஈரநிலம்
ஒடிசா 6 அன்சுபா ஏரி, பிடர்கனிகா சதுப்புநிலங்கள், சிலிகா ஏரி, ஹிராகுட் நீர்த்தேக்கம், சட்கோசியா பள்ளத்தாக்கு, தம்பாரா ஏரி
பஞ்சாப் 6 பியாஸ் கன்சர்வேஷன் ரிசர்வ், ஹரிகே வெட்லேண்ட், கஞ்சலி சதுப்பு நிலம், கேஷோபூர்-மியானி சமூக ரிசர்வ், நங்கல் வனவிலங்கு சரணாலயம், ரோபர் வெட்லேண்ட்
ராஜஸ்தான் 2 கியோலாடியோ தேசிய பூங்கா, சாம்பார் ஏரி
தமிழ்நாடு 20 சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் , கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை மார்ஷ் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம், வேம்பனூர் ஈரநில வளாகம், பிச்சாவரம் சதுப்புநிலம், கோடியக்கரை காட்டுயிர் உய்விடம், வடுவூர் பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் காப்பகம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், லாங் உட் சோலா காப்புக் காடு.
திரிபுரா 1 ருத்ரசாகர் ஏரி
உத்தரப்பிரதேசம் 10 பக்கிரா சரணாலயம், ஹைதர்பூர் ஈரநிலம், நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம், பார்வதி அர்கா பறவைகள் சரணாலயம், சமன் பறவைகள் சரணாலயம், சமஸ்பூர் பறவைகள் சரணாலயம், சாண்டி பறவைகள் சரணாலயம், சர்சாய் நவர் ஜீல், சுர் சரோவர், மேல் கங்கா நதி
உத்தரகாண்ட் 1 ஆசான் சரமாரி
மேற்கு வங்காளம் 2 கிழக்கு கொல்கத்தா சதுப்பு நிலங்கள், சுந்தர்பன் சதுப்பு நிலம்

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "75 Ramsar Sites in 75th Year of Independence". 15 August 2022. Retrieved 16 August 2022.
  2. O'Neill, A. R. (2022). "Evaluating high-altitude Ramsar wetlands in the Sikkim Eastern Himalayas". Global Ecology and Conservation 20 (e00715): 19. doi:10.1016/j.gecco.2019.e00715. 
  3. "Five more sites of India added to Ramsar list as wetlands of International importance".
  4. "Ramsar sites in India".
  5. https://www.business-standard.com/article/current-affairs/number-of-ramsar-sites-in-india-jumped-nearly-3-times-since-2014-pm-modi-123012900376_1.html
  6. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847983
  7. 85 RAMSAR SITES OF INDIA (as on 14.08.2024
  8. "RAMSAR WETLANDS SITES (As on August, 2022)". ENVIS Centre on Wildlife & Protected Areas. 7 August 2022. Retrieved 7 August 2022.
  9. "RAMSAR Wetland Sites". www.wiienvis.nic.in. Retrieved 2022-08-07.