இந்தியாவில் தனியுரிமைப் பணப்பை
இந்தியாவில் தனியுரிமை பணப்பை (privy purse) என்பது முந்தைய சுதேச அரசுகளின் ஆளும் குடும்பங்களுக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1947 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் முதன்முதலில் ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகவும், பின்னர் 1949 இல் தங்கள் மாநிலங்களை ஒன்றிணைப்பதற்காகவும் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், அவர்கள் அனைத்து ஆளும் உரிமைகளையும் இழந்தனர்.
1971 ஆம் ஆண்டுஇந்திய அரசியலைப்பில் 26 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படும்வரை அரச குடும்பங்களுக்கு இவ்வாறு தனிப்பட்ட முறையில் தொகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசிடமிருந்து அவர்களின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இரண்டு ஆண்டு சட்டப் போருக்குப் பிறகு இந்த சட்டத் திருத்தம் செயல்படுத்தப்பட்டது. [1] இருப்பினும், சில தனிப்பட்ட நிகழ்வுகளில், 1947க்கு முன்னர் ஆளும் அதிகாரங்களை வைத்திருந்த நபர்களுக்கு இந்த முறை தொடர்ந்தன. [2]}}
வரலாறு
[தொகு]பிரிட்டிசு பேரரசு இந்தியாவைப் பிரித்து, இந்தியா மற்றும் பாக்கித்தானில் தனது மேலாட்சி அரசு முறைக்கு சுதந்திரம் வழங்கியபோது, துணைக் கண்டத்தின் மூன்றில் ஒரு பகுதி இந்திய பேரரசுடன் நிலைப்பாடும் அந்தஸ்தும் மாறுபட்டிருந்த ஆட்சியாளர்களான சுதேச அரசுகளால் ஆளப்பட்டு வந்தன. 1947ஆம் ஆண்டில் இந்தியாவில் 560க்கும் மேற்பட்ட சுதேச அரசுகள் இருந்தன. அவற்றின் மேல் பிரிட்டிசு மகுடத்திற்கு அதிகாரம் இருந்தது, ஆனால் இறையாண்மை இல்லை. 1947 ஆம் ஆண்டில், 555 என்ற எண்ணிக்கையிலான சுதேச மாநிலங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் 48 சதவீத பரப்பளவை உள்ளடக்கியது. மேலும் அதன் மக்கள் தொகையில் 28 சதவீதம் ஆகும். [3]
அவர்களுடனான உறவுகள் துணை கூட்டணிகள் மற்றும் மறைமுக ஆட்சியை நிறுவும் பிற ஒப்பந்தங்களால் தீர்மானிக்கப்பட்டது. துப்பாக்கி வணக்கங்களின் ஒரு நெறிமுறை அமைப்பு சுமார் 120 முக்கிய மாநிலங்களின் (பாக்கித்தானும் உள்ளடக்கியது) தரவரிசையை நிர்ணயித்தது. இருப்பினும் பெரும்பாலானவை சிறிய / குட்டி 'வணக்கம் இல்லாத மாநிலங்கள்' ஆகும். இந்திய சுதந்திரச் சட்டம் 1947 இன் மூலம், பிரிட்டிசார் தனது அதிகாரத்தை கைவிட்டனர். மாநிலங்களின் ஆட்சியாளர்களுக்கு இந்தியா அல்லது பாக்கித்தானுடன் இணைந்து கொள்ளும் அல்லது முழு சுதந்திரமாக இருக்க தேர்வு செய்ய வழிவகுத்தது.
பெரும்பாலான சுதேச மன்னர்கள் இந்திய அரசாங்கத்தை நம்பியிருந்தார்கள். சுதந்திரத்திற்கு முன்னதாக, பெரும்பாலான முஸ்லிம் அல்லாத நாடுகள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் ஒன்று மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர் ஒரு சில மாநிலங்கள் மட்டுமே முழுமையான சுதந்திரத்திற்காக நின்றன. வல்லபாய் படேல் மற்றும் வி.பி. மேனனின் இராஜதந்திரத்தின் காரணமாக, திருவிதாங்கூர், போபால் மற்றும் ஜோத்பூர் ஆகியவை 1947 ஆகத்து 15க்கு முன்னர் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சுதந்திரத்திற்குப் பிறகும் ஜம்மு-காஷ்மீர், ஜுனாகத் மற்றும் ஐதராபாத் ஆகிய மூன்று மாநிலங்கள் தெனியே நின்றன.
பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளிநாட்டு உறவுகளை மட்டுமே இந்தியாவிற்கு விட்டுத்தர மாநிலங்கள் நினைத்தது. இந்த மாநிலங்களில் ஜனநாயக நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1949இல்தான் அவை இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாகின. இவ்வாறு திருவிதாங்கூர், மற்றும் கொச்சின் ஆகியவை இந்தியாவில் ஒன்றிணைந்து திருவாங்கூர்-கொச்சி என்ற புதிய மாநிலத்தை உருவாக்கின.
1947 ஆம் ஆண்டில் அரச குடும்பங்கள் தங்களின் தனிப்பட்ட செலவுகளுக்காக ஒரு பெரிய தொகையைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 1949 ஆம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் அதன் வருவாய்கள் முழுவதுமாக இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஆட்சியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனியுரிமை பணப்பைகள் மாநிலத்தின் வருவாய் போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டது. [4] கபுர்த்தலாவைச் சேர்ந்த திவான் ஜர்மானி தாஸ் கூறுகிறார்:
ஆட்சியாளர்கள் தங்கள் இறையாண்மையை சரணடையச் செய்தனர். மேலும் அவர்களுக்கு ஒரு தனியுரிமைத் தொகை மற்றும் பிற சலுகைகள் வழங்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பின் 291 வது பிரிவின் கீழ் 1949 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒரு தனியுரிமை பணப்பை என்பது ஒரு நிலையான, வரி இல்லாத தொகையாக முன்னாள் சுதேச ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் உத்தரவாதமாக அளிக்கப்படும். இந்த தொகை முன்னாள் ஆண்ட குடும்பங்களின் அனைத்து செலவுகளையும், மத மற்றும் பிற விழாக்களுக்கு உட்பட, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்து வழங்கப்படும். [5] சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் நிதிநிலைமை இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்க நிதியில் குறிப்பிடத்தக்க செலவினமாக அமைந்தது.
பெறுநர்கள் மற்றும் தொகைகள்
[தொகு]இவ்வாறான தொகை பல காரணிகளால் தீர்மானிக்கப்பட்டது. முந்தைய சுதேச மாநிலங்களின் சிறு நிலப்பிரபுக்கள், சுதேச அரசாங்கங்கள் அவர்களுக்கு வழங்கிய சிறிய கொடுப்பனவுகளைப் பெற்றனர். 565 சுதேச மாநிலங்களுக்கு, ஆண்டுக்கு ₹ 5,000 முதல் மில்லியன் கணக்கில் இருந்தன. சுமார் 102 தனியுரிமை பணப்பைகளில் 11 மாநிலங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ₹ 1 லட்சத்துக்கும் மேலானவை. இந்தியாவின் மிக முக்கியமான ஆறு மாநிலங்களான ஐதராபாத், மைசூர், திருவிதாங்கூர், பரோடா, ஜெய்ப்பூர் மற்றும் பாட்டியாலா ஆகியவைகளுக்கு மட்டுமே ₹10 லட்சத்திற்கு மேல் (8,898 அவுன்ஸ் தங்கம் மதிப்பு) தனியுரிமை பணப்பைகள் வழங்கப்பட்டன. வேறு சில மாநிலங்களுக்கு, சில தொகைகள் அப்போதைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், 1960 களில் பணவீக்க நெருக்கடி காரணமாக இது குறைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ₹ 42,85,714 என தொகை பெற்ற ஐதராபாத் ஒரு சில ஆண்டுகள் கழித்து ₹ 20,00,000 மட்டுமே பெற்றது. பின்னர், இந்திய அரசாங்கமும் பொதுவாக பின்னர் வந்த குடும்பத்தின் வாரிசுகளுக்கு கொடுப்பனவுகளைக் குறைத்தது. [6]
ஒழிப்பு
[தொகு]இவ்வாறு வழங்கப்படும் தொகைகள் மற்றும் அதிகாரப்பூர்வ பட்டங்களை ஒழிப்பதற்கான ஒரு சட்ட முன்வரைவு, முதலில் 1970 இல் பாராளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மாநிலங்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இல்லாததால் (ஒரு வாக்கு மூலம்) தோல்வியடைந்தது. [7]
1970 செப்டம்பர் 6, அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னாள் இந்திய மாநிலங்களின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் ஒரு சுருக்கமான உத்தரவை பிறப்பித்தார். அரசியலமைப்பின் பிரிவு 366 (22) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அனைத்து ஆட்சியாளர்களும் ஆட்சியாளர்களாக அங்கீகரிக்கப்படுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டார். இதன் விளைவாக ஆட்சியாளர்கள் பெற்றுவந்த தொகை உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் அவர்களின் தனிப்பட்ட சலுகைகளும் நிறுத்தப்பட்டது. சில ஆட்சியாளர்களால் அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. [8]
இது 1971இல் மீண்டும் பாராளுமன்றத்தின் முன் சட்ட முன்வரைவு முன்மொழியப்பட்டு, இந்திய அரசியலமைப்பின் 26 வது திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. [1] பின்னர் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க வேண்டியதன் அடிப்படையில் இவ்வாறு வழங்கப்படும் தொகைகளை ஒழிப்புக்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.
பல முன்னாள் அரச குடும்பங்கள், தங்களுக்கு வழங்கபட்ட நிதி ஒழிக்கப்படுவதை எதிர்த்து போராட முயன்றது, முதன்மையாக 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடங்களைப் பெறுவதற்கான பிரச்சாரங்கள் மூலம். அவர்களில் பலர் பெரும் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இதில் குர்கானில் இருந்து போட்டியிட்ட பட்டோடியின் கடைசி மற்றும் முன்னாள் நவாப் மன்சூர் அலி கான் பட்டோடியும் அடங்குவார். மன்சூர் விசால் அரியானா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இரு வழி போட்டியில் வெறும் 5% வாக்குகளையேப் பெற்றார். [9] 1971 மக்களவைத் தேர்தலில் விஜய ராஜே சிந்தியா மற்றும் அவரது மகன் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Twenty Sixth Amendment". Indiacode.nic.in. 28 December 1971. பார்க்கப்பட்ட நாள் 19 November 2011.
- ↑ Dr. Lakshmi Raghunandan. At the turn of the Tide, the Life and Times of Maharani Sethu Lakshmi Bayi, the Last Queen of Travancore.
- ↑ "Who betrayed Sardar Patel?".
- ↑ Jarmani Dass. Maharaja.
- ↑ "Privy Purses to Rulers - Reduction Effected in Certain Cases" (PDF). Press Information Bureau, Government of India - Archive.
- ↑ "Maharaja" by Jarmani Dass, page 424-435
- ↑ "H. H. Maharajadhiraja Madhav Rao vs Union of India on 15 December 1970". Indian Kanoon. p. See para 44. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012.
The Bill was voted upon in the Lok Sabha on September 2, 1970. 332 votes for and 154 votes against it, were cast. It was considered in the Rajya Sabha, on September 5, 1970, and was defeated, 149 voting for and 75 against it. It failed in the Rajya Sabha to reach the requisite majority of not less than two-thirds of the members present and voting.
- ↑ "H. H. Maharajadhiraja Madhav Rao ... vs Union of India on 15 December 1970". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-04.
- ↑ "Cricketers in Politics". Archived from the original on 9 June 2009. பார்க்கப்பட்ட நாள் 23 March 2009.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)