இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993[1] இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993[2], (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,
செயற்பாடுகள்
[தொகு]தேசிய மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்[3]
- (அ) தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
- மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
- அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்றத் தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
- (ஆ) நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் தேசிய மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
- (இ) அணுகுமுறை, சீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு தேசிய மனித உரிமை அணையம் அதனைப் பார்வையிடலாம்.
- (ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்பட் செயற்படுத்துதற்கான நடைமுறைகளை பரிந்துரை செய்யலாம்.
- (உ) வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
- (ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள் மற்றும் பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
- (எ) மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியிணை ஆணையமே மேற்கொள்ளலாம்.
- (ஏ) மனித உரிமைகள் பாதுகாப்புக் குறித்த கல்வியை, விழிப்புணர்வை சமிதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் பரப்பவும், மக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்கங்கள் மற்றும் ஊடகங்கள், பிரசுரங்கள் வாயிலாக மக்கள் அறிய ஆணையம் வழிகள் ஏற்படுத்தலாம்.
- (ஐ)மனித உரிமை போன்றத் துறைகளில் பணிபுரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கின்றது.
- (ஒ) மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.
–
புகார்
[தொகு]புகார்கள் அனுப்புவது
[தொகு]தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் [3] கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
- புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
- ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
- தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
–
புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை
[தொகு]- புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-[4]
- பெயர்
- இருப்பிட முகவரி
- புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
- நாள் மற்றும் நிகழ்வின் காலம்
- மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
- எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
- நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
- இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன
–
- குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.
ஏற்கப்படாத புகார்கள்
[தொகு]கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.[3]
- தெளிவற்ற புகார்.
- தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.
- மிகச் சிறிய அளவிலான புகார்.
- பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
- சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
- பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
- மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.
- தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
- ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.
–
புகார்களைப் பெறுதல்
[தொகு]
- புகார்களை ஆணையம் பெற்றபின் அவைகளை துறை வாரியாக பிரிக்க்ப்பட்டு அவைகளை நாட்குறிப்பில் பதிவு செய்தபின் அந்தந்த சட்டப்பிரிவுக்கு அனுப்ப படுகின்றது.[3]
- [3]அவசரப் புகார்களை அந்த துறை சட்டப் பதிவாளரின் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டபின், பதிவாளர் அதற்குத் தேவயான கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
- புகார்கள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில் இல்லாதபொழுது அவற்றை உடனடியாக மொழிபெயர்த்து ஆணையத்தின் முன் வைக்கப்படும். (தேசிய ஆணையத்தில் இம்முறை கையாளப்படுகின்றது) அவசரத்தன்மைக்கேற்ப புகார்கள் சுருக்கமான உரைகளாக ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றன (இதுவே போதுமானதாக கருதப்படுகின்ற நேரத்தில்).[3]
–
ஆய்வு
[தொகு]ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[3] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
காலவரை
[தொகு]புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்[3] ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்[3] தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆக்கமைவு மற்றும் நியமனம்
[தொகு]இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
ஆணையக் குழு | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணைய நியமனங்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தற்பொழுதய ஆக்கமைவு உறுப்பினர்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
'
'
ஆணையம் அமைந்துள்ள இடம்
[தொகு]தேசிய மனித உரிமை ஆணையம் புதுதில்லியில் காப்பர் நிக்கஸ் மார்க், அருகில் பரித்கோட் இல்லத்தில் (அவுஸ்) இயங்குகின்றது. ஆணையத்தை தொலைபேசியில் ஆணுக 011-23385368, எண்ணும், புகார் செய்ய கைபேசி எண்,9810298900 அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் 24 மணி நேரமும் பெறப்படும்.
புகாருக்கு இன்னுமோரு தனி தொலைநகல் எண் 011-23386521 / ஆட்சியர்களை அணுக 23384863,/ புலனாய்வுக்கு 23382734 அளிக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் covdnhrc@nic.in (பொது) / புகாருக்கு jrlaw@nic.in மற்றும் ஆய்வு பிரிவிற்காக resnhrc@nic.in அளிக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு
[தொகு]தேசிய மனித உரிமை ஆணையம் 2015 ஆம் ஆண்டு நெல்லையில் பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.[5]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தேசிய மனித உரிமை ஆணையத்தின் துண்டு பிரசுரங்களின் பி டி எப்
- ↑ தேசிய மனித உரிமை ஆணையத்தின் சட்டத்தொகுப்பு பி டி எப்
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 வேங்கடாசலம், புலமை (செப்டம்பர்,2007). மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகள். சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98: தாமரை பப்லிக்கேசன் பி லிட்,. pp. xii+100=112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88049-78-6.
{{cite book}}
: Check date values in:|date=
(help); Unknown parameter|code=
ignored (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link) - ↑ மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009
- ↑ பள்ளி மாணவர்களிடையே ஜாதி பிரச்சினை: நெல்லை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் தி இந்து தமிழ் 27 நவம்பர் 2015
வெளிப்புற இணைப்புக்கள்
[தொகு]
- தேசிய மனித உரிமை ஆணையம்-அதிகாரப்பூர்வ இணையத் தளம்
- தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்
- கேரள மாநில மனித உரிமை ஆணையம்
- மேற்கு வங்க மனித உரிமை ஆணைய இணையத் தளம்
- மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம்
- இராஜஸ்தான் மாநில மனித உரிமை ஆணையம்
- பஞ்சாப் மாநில மனிதவுரிமை ஆணையம்
- அசாம் மாநில மனித உரிமை ஆணையம்
- மத்தியப் பிரதேச மாநில மனித உரிமை ஆணையம்- இந்தி மொழி இணையம்