உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் போக்குவரத்துக் கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் போக்குவரத்துக் கழகங்களை அமைத்து மக்களின் தரைவழிப் போக்குவரத்துக்கு உதவுகின்றது. இந்தப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நடுவண் அரசு குறிப்பிட்ட பங்கும், மாநில அரசு குறிப்பிட்ட பங்கும் முதலீடு செய்துள்ளன. இது தவிர இந்தக் கழகங்கள் தனியாக பங்குகளை வெளியிடுகின்றன. இந்த பங்குகளுக்கு முதல், பங்குகள், பங்காதாயங்கள் போன்றவைகளுக்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.

பணிகள்

[தொகு]
  • போக்குவரத்துக் கழகத்தின் முக்கியப் பணி தரைவழிப் பாதையை மிகவும் குறைவான செலவில் மக்களுக்கு அளிப்பது.
  • மக்களுக்குத் தேவையான அளவு பேருந்துகளை இயக்குதல்
  • போக்குவரத்துக் கழகம் தேவையானவற்றை உற்பத்தி செய்வது, தேவைப்படும்போது. நிலம். சொத்து ஆகியவற்றை வாங்கவும். விற்கவும் செய்வது.
  • மாநில அரசின் அனுமதியுடன் பணத்தைக் கடனாக வாங்கலாம்.

வரவு செலவு தணிக்கை

[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்துக் கழகத்தின் வரவு செலவு கணக்குகளை மாநில அரசிடம் அளிக்க வேண்டும். இது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இக்கழகத்தின் கணக்குகள் அனைத்தும் மாநில அரசின் தணிக்கைக் குழுவினால் சரிபார்க்கப்படுகின்றன.