உள்ளடக்கத்துக்குச் செல்

2007 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், 2007

← 2002 10 ஆகத்து 2007 2012 →
 
வேட்பாளர் முகம்மது அமீத் அன்சாரி நச்மா எப்துல்லா இரசீத் மசூத்
கட்சி காங்கிரசு பா.ஜ.க சமாஜ்வாதி கட்சி
கூட்டணி ஐ.மு.கூ தே.ச.கூ மூன்றாம் அணி
சொந்த மாநிலம் மேற்கு வங்காளம் மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம்

தேர்வு வாக்குகள்
455 222 75
விழுக்காடு 60.50% 29.52% 9.98%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

பைரோன் சிங் செகாவத்
பா.ஜ.க

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

முகம்மது அமீத் அன்சாரி
காங்கிரசு

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007 (2007 Indian vice-presidential election) என்பது 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 10 ஆகத்து 2007 அன்று நடைபெற்ற தேர்தலாகும். இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த முகமது அமீத் அன்சாரி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்போதைய, பைரோன் சிங் செகாவத் மறுதேர்தலைக் கோரவில்லை; அதற்குப் பதிலாக 2007 தேர்தலில் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் பிரதிபா பாட்டிலிடம் தோல்வியடைந்தார். பாட்டில் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இவர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

பின்னணி

[தொகு]

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பைரோன் சிங் செகாவத்தின் பதவிக்காலம் ஆகத்து 18, 2007 வரை இருந்ததால், இவரைத் தொடர்ந்து பொறுப்பேற்பவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் தேவைப்பட்டது.[1]

வாக்காளார்கள்

[தொகு]

இத்தேர்தலில் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 545 மக்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 790 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகாரிகள்

[தொகு]

தேர்தல் அதிகாரி: முனைவர் யோகேந்திர நரேன், பொதுச் செயலாளர், மக்களவைஉதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: என். சி. ஜோஷி & ரவி காந்த் சோப்ரா[1]

முடிவுகள்

[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2007-முடிவுகள்

வேட்பாளர்
கட்சி
பெற்ற வாக்குகள்
வாக்குகள் விகிதம்
முகம்மது அமீத் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு 455 60.51
நச்மா எப்துல்லா பாரதிய ஜனதா கட்சி 222 29.52
இரசீத் மசூத் சமாஜ்வாதி கட்சி 75 9.97
மொத்தம் 762 100.00
செல்லத்தக்க வாக்குகள் 752 98.69
செல்லாத வாக்குகள் 10 1.31
பதிவான வாக்குகள் 762 96.46
வாக்களிக்காதவர் 28 3.54
வாக்காளர்கள் 790

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]