இட்ரியம்(III) ஐதராக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
16469-22-0 | |
ChemSpider | 77052 |
EC number | 240-520-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 85438 |
| |
பண்புகள் | |
Y(OH)3 | |
தோற்றம் | வெண் திண்மம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்ரியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இசுக்காண்டியம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்ரியம்(III) ஐதராக்சைடு (Yttrium(III) hydroxide) Y(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]இட்ரியம்(III) நைட்ரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடின் நீரிய கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்ரியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது: [1]
- Y(NO3)3 + 3 NaOH → Y(OH)3↓ + 3 NaNO3
இது இட்ரியம்(III) ஐதராக்சைடை ஒரு வெள்ளை ஊண்பசை வீழ்படிவாகக் கொடுக்கிறது. ஒரு வெள்ளைப் பொடியாக இவ்வீழ்படிவை உலர்த்தலாம். [2]
வேதிப் பண்புகள்
[தொகு]இட்ரியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்புகளைக் கொடுக்கிறது.
- Y(OH)3 + 3 HNO3 → Y(NO3)3 + 3 H2O
- 2 Y(OH)3 + 3 H2SO4 → Y2(SO4)3 + 3 H2O
வளிமண்டல கார்பனீராக்சைடை இது ஈர்த்துக் கொள்ளூம்.[2] வெப்பபபடுத்தும் போது இட்ரியம்(III) ஐதராக்சைடு சிதைவடைகிறது.
- 2 Y(OH)3 → Y2O3 + 3 H2O↑
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 田俐,陈稳纯,陈琳 等. 水热法合成氢氧化钇纳米管. 无机材料学报. 2009. 24(2): 335-339
- ↑ 2.0 2.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. CRC Press. pp. 460–461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1461-1.