இடையர்
Appearance



இடையர் (ⓘ) என்பவர் ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.[1][2].
பெயர்க்காரணம்
[தொகு]நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் இருப்பதால் இங்கு வாழ்பவர்களை இடையர் என்று அழைக்கும் பழக்கம் உருவானது.[சான்று தேவை]
பணிகள்
[தொகு]- கால்நடைகளை பராமரித்தல்
- கால்நடைகளுக்கு உணவளித்தல்
- கால்நடைகளை மேய்த்தல்
- கால்நடைகளின் நோய்களை களைதல்
- பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)
- பழங்காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து சென்றால் அவற்றினை தொடர்ந்து சென்று மீட்டல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)