உள்ளடக்கத்துக்குச் செல்

இடைநிலைக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலோவாக்கியாவில், பிரட்டிஸ்லாவா என்னும் இடத்திலுள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி.

இடைநிலைக் கல்வி அல்லது இரண்டாம் நிலைக் கல்வி என்பது, தொடக்கக் கல்வியை நிறைவு செய்த பின்னர் தொடர்கின்ற கல்வி ஆகும். இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர் ஒரு மாணவன் அல்லது மாணவி, உயர் கல்வியை அல்லது தொழிற் பயிற்சியைத் தொடரமுடியும். சில நாடுகளில் தொடக்கக் கல்வி மட்டுமே கட்டாயம். வேறு சில நாடுகளில் இடைநிலைக் கல்வியும் கட்டாயம் ஆகும்.

இடைநிலைக் கல்வியின் காலம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவுகளைக் கொண்டதாக உள்ளது. பொதுவாக இது 7 அல்லது 8 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. ஆறாம் வகுப்பு அல்லது ஆறாவது ஆண்டு முதல் 12 அல்லது 13 ஆம் ஆண்டுவரை இடைநிலைக் கல்வி இடம்பெறும். பெரும்பாலான நாடுகளின் கல்வித் திட்டத்தில் 10 ஆம் ஆண்டில் பொதுத் தேர்வு இடம்பெறும். இந்தத் தேர்வின் பெறுபேறு பல்வேறு தொழில் வாய்ப்புக்களுக்கும், உயர்கல்விக்கும் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலமே இடைநிலைக் கல்வியின் எஞ்சிய பகுதியைத் தொடர முடியும். இடைநிலைக் கல்வியின் முடிவிலும் ஒரு பொதுத் தேர்வு உண்டு. பல நாடுகளில், இதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கோ அனுமதிக்கப்படுகிறார்கள்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Man, John (2002). Gutenberg: How One Man Remade the World with Words. New York: John Wiley and Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-21823-5.
  2. Partridge, AC (1973), English Biblical Translation, London: Andrè Deutsch, pp. 38–39, 52–52.
  3. Daniel Murphy, Comenius: A Critical Reassessment of his Life and Works (1995), p. 8 and p. 43.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைநிலைக்_கல்வி&oldid=4133015" இலிருந்து மீள்விக்கப்பட்டது