இசுவாகம்
ஸ்வாகம் | |
---|---|
இயக்கம் | சஜ்ஜி என்.கருன் |
தயாரிப்பு | சஜ்ஜி என்.கருன் |
கதை | சஜ்ஜி என்.கருன் எஸ்.ஜெயசந்திரன் நாயர் ரெகுநாத் பலேரி |
இசை | ஜசாக் தோமஸ் கோட்டுகபள்ளி k.ராகவன் |
நடிப்பு | அஸ்வனி ஹரி தாஸ் கோபி பிரசீதா முல்லநெழி சரத் வேணுமணி விஷ்ணு |
ஒளிப்பதிவு | ஹரி நாயர் |
படத்தொகுப்பு | பி.ராமன் நாயர் |
வெளியீடு | 1994 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
ஸ்வாகம் (My Own) (1994) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 1994 ஆம் ஆண்டு காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரு குழந்தைகளுக்குத் தாயான அன்னபூர்னாவின் குடும்பம் மிகவும் எளிய குடும்பமாகும்.அண்மையில் இறந்து போன தனது கணவருக்குச் சொந்தமான தேனீர்க்கடையில் வரும் வருமானங்களை வைத்து குடும்பச் செலவுகளை ஏற்கும் தாயாக விளங்குகின்றார் அன்னபூர்னா.இவரின் மகனான கண்ணன் பள்ளியில் கவனம் செலுத்தாதனால் பரீட்சையில் தோல்வியடைகின்றான்.இதன் பின்னரும் படிப்பதற்கு இவனால் முடியாது என்பதனை அறிந்து கொள்ளும் அன்னபூர்னா தன் மகனை இராணுவச் சேர்ப்பிற்காக அனுப்புகின்றாள்.அங்கு வேலை கிடைத்து குடும்பத்தில் புது மலர்வு ஏற்படும் என்று எண்ணிய அவள் இராணுவத்தில் மகனைச் சேர்ப்பதற்காக பெருந்தொகையான பணத்தினை இராணுவத் தலைமை அதிகாரிக்கு வழங்குகின்றாள்.பின்னர் அம்முகாமில் ஏற்பட்ட தகராற்றினால் தன் மகன் கொல்லப்படுவதனைக் கேட்டு அறிந்து பதற்றத்துடன் தன் மகனின் உடலைக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் கொண்டு வருகின்றாள்.தனது சகோதரனையும் தாயையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் அன்னபூர்னாவின் மகள்.
விருதுகள்
[தொகு]1995 பெர்கமோ திரைப்பட கூட்டம் (இத்தாலி)
- வென்ற விருது - பிரோன்ஸ் ரோசா கமுனா - சஜ்ஜி.என் கருன்
1994 கேன்ஸ் திரைப்பட விழா (பிரான்ஸ்)
- பரிந்துரைக்கப்பட்டது - Golden Palm - சஜ்ஜி.என் கருன்
1995 தேசிய திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - மக்கள் விருது - சஜ்ஜி.என் கருன்
1995 இன்ஸ்புரூக் திரைப்பட விழா (ஆஸ்திரியா)
- வென்ற விருது - சிறந்த திரைப்படம் - சஜ்ஜி.என் கருன்