உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டாண்டர்ட் & புவர்'ஸ் நிதிய சேவைகள் எல்எல்சி
வகைவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்
நிறுவுகை1860, தற்போதைய நிறுவன தகுதி 1941இல்
நிறுவனர்(கள்)டரைல் லெத்பிரிட்ஜ்
தலைமையகம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்தேவன் சர்மா (தலைவர்)
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்$2.61 billion US$ (2009)[1]
பணியாளர்10,000 (ஏறத்தாழ)
தாய் நிறுவனம்மக்ராஹில் நிறுவனங்கள்
இணையத்தளம்standardandpoors.com
நியூயார்க் நகரத்தில் 55, வாடர் சாலையில் உள்ள நிறுவனத் தலைமையகம் (2008)

இசுடாண்டர்ட் & புவர்'சு (Standard & Poor's, சுருக்கமாக S&P) ஓர் அமெரிக்க நிதியச் சேவைகள் நிறுவனமாகும். பங்குகள் மற்றும் கடனீடு ஆவணங்களை அலசி ஆய்வு செய்து வெளியிடும் மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற பங்குச் சந்தை குறியீடுகளுக்கு பரவலாக அறியப்பட்டது. கடன் மதிப்பீடு வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.[2] இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூயார்க் நகரில் கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.[3]

ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி தேவன் சர்மா பதவி விலக வேண்டியதாயிற்று.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "S&P | About S&P | Americas - Key Statistics". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011.
  2. Blumenthal, Richard (மே 5, 2009). "Three Credit Rating Agencies Hold Too Much of the Power". Juneau Empire - Alaska's Capital City Online Newspaper. Archived from the original on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011.
  3. "Office Locations." Standard & Poor's. Retrieved on ஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "
  4. S&P president steps down after political backlash த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011

வெளியிணைப்புகள்

[தொகு]