உள்ளடக்கத்துக்குச் செல்

இங்கிலாந்தின் தேசியப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கிலாந்தின் தேசியப் பண் என்று அலுவல்முறையாக எதுவும் இல்லாதபோதும் இதற்காக பல்வேறு பாடல்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் 'கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும்' பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டுக்களில் தற்போது பயன்படுத்தப்படும் பண்கள்

[தொகு]

தற்போது கீழ்காணும், பாடல்கள் இசைக்கப்படுகின்றன:

பல்விளையாட்டு நிகழ்வுகள்

[தொகு]

ஒரு விளையாட்டு போட்டிகள்

[தொகு]
  • பன்னாட்டு காற்பந்து போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணை பயன்படுத்துகிறது.
  • பன்னாட்டு ரக்பி யூனியன் போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் போட்டி துவக்கத்தில் "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைக்கிறது.
  • பன்னாட்டு ரக்பி லீக் போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணை பயன்படுத்துகிறது.
  • பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம் போட்டிகளில், இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணி 2003 முதல் "ஜெருசலம்" பண்ணைத் தனது துவக்க பண்ணாக பயன்படுத்தி வருகிறது.[2]
  • பன்னாட்டு லாக்ரோசு போட்டிகளில், இங்கிலாந்தின் ஆடவர் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் மகளிர் அணி "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைத்து வருகின்றன.

சான்றுகோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-11. Retrieved 2013-02-26.
  2. "Sing Jerusalem for England!". BBC News. 2005-09-06. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4217144.stm. பார்த்த நாள்: 2008-06-15. 

வெளி இணைப்புகள்

[தொகு]