ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மையம்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மையம் (A.P.J. Abdul Kalam Centre) என்பது ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். இதற்கு இந்தியா முழுமையும் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த மையம் 2015-இல் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர்) நினைவாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை எழுத்தாளர், சமூக தொழில்முனைவோர் மற்றும் பேச்சாளர் சிறீஜன் பால் சிங் நிறுவினார். இவர் 2009 மற்றும் 2015க்கு இடையில் அப்துல் கலாமின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளுக்கான சிறப்புப் பணி அதிகாரியாகவும் ஆலோசகராகவும் பணியாற்றினார். கலாமின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மனிதக்குலத்திற்கு நிலையான மற்றும் வாழக்கூடிய பூமியை உருவாக்க இந்த அமைப்பு விரும்புகிறது. சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் கல்வி மற்றும் அறிவிற்கான அணுகலை மேம்படுத்துவதற்காகத் தேசிய மற்றும் பன்னாட்டு வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக நிர்வாகம் மற்றும் சமூக நிறுவனங்களில் புதுமைகளை மேம்படுத்துவதையும் இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கல்வி
[தொகு]கலாம் மையமானது இந்தியாவின் தொலைதூர மற்றும் குறைந்த வருமானம் உள்ள பகுதிகளில் கலாம் நூலகத்தின் பதாகையின் கீழ் இலவச நூலகங்களின் வலையமைப்பை நடத்துகிறது. இந்த நூலகங்கள் குடிசைப் பகுதிகள், அரசுப் பள்ளிகள், குறைந்த கட்டண தனியார் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் கண்காணிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் வாசிப்பு மற்றும் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. 500,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வித் தேவைகளை இந்த நூலகங்கள் பூர்த்திச் செய்கின்றன. இம்மையத்தின் மற்றொரு முன்முயற்சி ட்ரீமத்தான் [1] என்பது. இது இளைஞர்களிடையே கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கான வருடாந்திரப் பிரச்சாரமாகும். இளைஞர்கள் தமது முழு திறனை அடையவும் அதற்கு அப்பால் செல்லவும் அவர்களுக்குப் பொருத்தமான திறன்களை வழங்குவதன் மூலம் இது செயல்படுகிறது. கலாம் மையமானது தெலுங்கானாவில் 500க்கும் மேற்பட்ட துணை ஆசிரியர்களைக் கொண்டுள்ளது. இது கலாம் பாரத்[2] முன்முயற்சியின் கீழ் அரசாங்கப் பள்ளிகளில் உள்ள அறிவு இடைவெளிகளை நிரப்ப உதவுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All Aboard the Sapno ka Dibba! A Metro Ride Inspires Underprivileged Kids to Reach for Their Dreams". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
- ↑ "38 हजार बच्चों को कलाम बनने का सामर्थ्य देने का नाम है 'कलाम भारत' प्रोजेक्ट". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.