உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. கு. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. கு. சுப்பையா (A. K. Subbiah) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தற்போதைய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சித்தமல்லி கிராமத்தினைச் சார்ந்தவர். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்தவர். சுப்பையா 1952, 1962, 1967, 1971 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இதில் 1952, 1962ஆம் ஆண்டுகளில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[1] 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் கோட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[2] தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய மகன் ஆ. கு. சு. விஜயன் ஆவார். விஜயன் திராவிட முன்னேற்றக் கழக விவசாய அணிச் செயலாளர் ஆவார். மேலும் விஜயன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக (நாகப்பட்டினம்) மூன்று முறை இருந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Madras Legislative Assembly Who is Who 1962 (1 ed.). Madras: Legislative Assembly Department Madras 9. p. 213.
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. Madras: Tamil Nadu Legislative Assembly Department. p. 380.
  3. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கு._சுப்பையா&oldid=4115522" இலிருந்து மீள்விக்கப்பட்டது