உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவெர்சு தொகுப்புவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவெர்சு தொகுப்புவினைAuwers synthesis
பெயர் மூலம் காரல் வோன் ஆவெர்சு
வினையின் வகை பிணைப்பு வினை
இனங்காட்டிகள்
RSC சுட்டெண் RXNO:0000474

ஆவெர்சு தொகுப்புவினை (Auwers synthesis) என்பது குமேரோனிலிருந்து பிளாவோனோல் உருவாகும் தொடர்ச்சியான கரிம வினைகளின் வரிசையாகும். இவ்வினை முதன் முதலில் செருமானிய வேதியியலாளர் காரல் வோன் ஆவெர்சு என்பவரால் 1908 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது[1][2][3][4][5]

ஆவெர்சு தொகுப்பு வினை
ஆவெர்சு தொகுப்பு வினை

.

வினையின் முதலாவது படிநிலையில் அமில வினையூக்கியால் பென்சால்டிகைடு மற்றும் 3-சைக்ளோ ஆக்சாபென்டனோன் இடையில் நிகழ்த்தப்படும் ஆல்டால் குறுக்கத்தால் ஆர்த்தோ ஐதராக்சிசால்கோன் உருவாகிறது. ஆல்க்கீன் குழு புரோமினேற்றம் அடைந்து டைபுரோமோ கூட்டுவிளைபொருள் தோன்றுகிறது. பின்னர் இது மறுசீரமைப்பு அடைந்து பொட்டாசியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து பிளாவோனோல் உருவாகிறது.

வினைவழிமுறை[தொகு]

இவ்வினை நிகழ்வதற்கு சாத்தியமுள்ள வினைவழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வினை வழிமுறை
வினை வழிமுறை

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Auwers, K. Müller, "Umwandlung von Benzal-cumaranonen in Flavonole", Ber. Dtsch. Chem. Ges., 41, 4233–4241 (1908) (எஆசு:10.1002/cber.190804103137).
  2. K. v. Auwers, P. Pohl, "Über die Umwandlung von Benzalcumaranonen in Flavonole", Liebigs Ann. Chem., 405, 243–294 (1914) (எஆசு:10.1002/jlac.19144050302).
  3. K. v. Auwers, P. Pohl, "Eine Synthese des Fisetins", Ber. Dtsch. Chem. Ges., 48, 85–90 (1915) (எஆசு:10.1002/cber.19150480114).
  4. K. v. Auwers, "Zur Bildung von Flavonolen aus Benzal-cumaranonen", Ber. Dtsch. Chem. Ges., 49, 809–819 (1916) (எஆசு:10.1002/cber.19160490188).
  5. K. v. Auwers, E. Auffenberg, "Über Cumaranone und Hydrindone", Ber. Dtsch. Chem. Ges., 52, 92-113 (1919) (எஆசு:10.1002/cber.19190520114).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவெர்சு_தொகுப்புவினை&oldid=3382206" இலிருந்து மீள்விக்கப்பட்டது