ஆழ்கடல் குன்றுகள்
ஆழ்கடல் குன்றுகள் (Abyssal hill ) என்பவை கடலடிச் சமவெளியின் தரைப்பகுதியில் இருந்து மேலெழுந்து உருவான சிறிய குன்றுகளைக் குறிக்கும்[1]. பூமியின் மீது மிக ஏராளமாகக் காணப்படுகின்ற புவிப்புறக் கட்டமைப்புகள் இவைகளேயாகும். ஏறத்தாழ கடல்படுகைகளின் 30 சதவீதப் பரப்பில் ஆழ்கடல் குன்றுகள் நிறைந்துள்ளன. ஓப்பீட்டளவில் ஒரு சில நூறு மீட்டர் உயரத்திற்கு விளிம்புகள் உயர்ந்துள்ள குன்றுகள் ஆழ்கடல் குன்றுகள் என வரையறுக்கப்படுகின்றன. சில நூறு மீட்டர் தொடங்கி சில கிலோமீட்டர்கள் வரைகூட இவற்றின் அகலம் விரிந்திருக்கின்றது. இத்தகைய ஆழ்கடல் குன்றுகள் நிறைந்துள்ள கடலடிச் சமவெளிப் பகுதிகள் ஆழ்கடல் குன்று பிரதேசங்கள் என அழைக்கப்படுகின்றன. எனினும் இப்பிரதேசங்களில் ஆழ்கடல் குன்று தனித்தோ சிறு குழுக்களாகவோ காணப்படலாம்.[2]
பசிபிக் பெருங்கடலின் கடலடிச் சமவெளியில் அதிக அளவிளான ஆழ்கடல் குன்றுகள் காணப்படுகின்றன[1] . இக்குன்றுகள் 50 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உயரம், 2 முதல் 5 கிலோமீட்டர் அகலம் மற்றும் 10 முதல் 20 கிலோ மீட்டர் நீளம்[3] வரையிலான அளவிற்கு பரந்து விரிந்துள்ளன. கிழக்குபசிபிக்கின் பக்கவாட்டில் இவைகள் பிளவிடை மேடுகளாகவும் பிளவிடை பள்ளங்களாகவும் உருவாகி காலப்போக்கில் ஆழ்கடல் குன்றுகளாக உருவாகியிருக்கலாம்[1]. அதிகப்படியாக உருவான மாக்மா குழம்பு நாளடைவில் பெருங்கடலின் புறவெளியாக மாறி முகடுகளாகவும் உயர்ந்திருக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kennish, Michael J. (2001). Practical handbook of marine science. Marine science series (3rd ed.). CRC Press. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2391-6.
- ↑ Heezen, Bruce C.; Laughton, A. S. (1963). Abyssal Plains. Sea: Ideas and Observations on Progress in the Study of the Seas. Vol. 3. Harvard University Press,. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01730-7.
{{cite book}}
: Unknown parameter|booktitle=
ignored (help); Unknown parameter|editors=
ignored (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Dilek, Y. (1998). "Structure and tectonics of intermediate-spread oceanic crust drilled at DSDP/ODP Holes 504B and 896A, Costa Rica Rift". Geological evolution of ocean basins: results from the Ocean Drilling Program. Geological Society special publication. Vol. 131. Geological Society. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86239-003-7.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help)