ஆல்வன் கிரகாம் கிளார்க்
Appearance
அல்வான் கிரகாம் கிளார்க் Alvan Graham Clark | |
---|---|
அல்வான் கிளார்க்கும் அவரது உதவியாளரும் (வலது) 40-அங் வில்லையுடன் 1896. | |
பிறப்பு | ஃபால் ஆறு, மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | சூலை 10, 1832
இறப்பு | சூன் 9, 1897 | (அகவை 64)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | சிரியசு பி |
ஆல்வன் கிரகாம் கிளார்க் (Alvan Graham Clark, 10 சூலை 1832 - 9 சூன் 1897) அமெரிக்க வானியலாளரும், தொலைநோக்கி செய்வினைஞருமாவார். மேலும் இவர் ஆல்வன் கிளார்க் குழுமம் நிறுவிய ஆல்வன் கிளார்க்கின் மகனாவார்.
1862 சனவரி 31ஆம் நாளன்று மாசச்சூசெட்ஸ் கேம்பிரிட்ச் துறையில் புதிய 18½ தொலைநோக்கியை வெள்ளோட்டம் பார்த்த போது இவர் சிரியசு-பி விண்மீனைக் கண்டறிந்தார். இந்தப் பொலிவு அளவு 8 கொண்ட சிரியசின் இணைமீன்தான் முதன்முதலில் கண்டறிந்த வெண் குறுமீன் ஆகும்.
இந்த 18½ அங்குலத் தொலைநோக்கி இன்றும் இலினொய், எவான்சுட்டனில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் டியர்பார்ன் வான்காணகத்தில் பயன்படுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Circumstances of the day deliver Observatory". Archived from the original on 2009-03-16. பார்க்கப்பட்ட நாள் 2015-05-19.
- "Alvan Clark, Astronomy, Biographies". AllRefer.com. பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம்
- The Dearborn Telescope
- Sirius A & B: A Double Star System In The Constellation Canis Major
- Northwestern University Astronomy and Astrophysics - History of Dearborn Observatory பரணிடப்பட்டது 2019-07-13 at the வந்தவழி இயந்திரம்
- Look south to see winter's brightest constellations