ஆலிலை கண்ணன்
Appearance
ஆலிலை கண்ணன் என்பது திருமால் தன்னுடைய பக்தரான மார்க்கண்டேய முனிவருக்கு காட்சிதந்த கோலமாகும். இந்தக் கோலத்தில் ஆலிலை எனப்படும் ஆலமரத்தின் இலையில் குழந்தை வடிவில் கண்ணனாக திருமால் இருப்பார். அந்த இலை பெரும் பிரளயத்தில் மிதந்து கொண்டிருக்கும்.
மார்க்கண்டேய மகரிசிக்கு வில்லிப்புத்தூரில் இக்காட்சி காணக் கிடைத்ததாகவும். பிரளயக் காலத்தில் அனைத்து தேவர்களையும், உயிர்களையும், அண்டங்களையும் உள்ளடக்கி வயிற்றிலுள் சுமந்துகொண்டு கண்ணன் குழந்தையாக இருப்பதை அவர் கண்டதாகவும் நம்பப்படுகிறது.[1] ஆலிலையின் மீது திருமால் படுத்திருப்பதால், ஆலிலை ஆதிசேஷனது அம்சமாகக் கருதப்படுகிறது.[1]
வைணவக் கோயில்களில் திருவிழாக் காலங்களில் திருமாலுக்கு ஆலிலை கண்ணன் கோலத்தில் அலங்காரம் செய்கின்றனர்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 ":: TVU ::".