ஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்பூர் அருங்காட்சியகம்
Alampur Museum
Map
அமைவிடம்ஆலம்பூர், தெலுங்கானா, இந்தியா.

ஆலம்பூர் தொல்லியல் துறை அருங்காட்சியகம் (Alampur ASI Museuem ) என்பது இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஆலம்பூர் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் ஆகும்[1]. வரலாற்றில் ஆலம்பூர் கோயில் நகரம் எனப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம் நவபிரம்மா கோயில் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் வெவ்வேறு வகையான சிற்பங்கள் சேகரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான மாதிரிகள் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சாளுக்கியர்களின் காலத்தியவையாகும். சில கற்சிற்பங்கள் 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த காக்கத்தியர் காலத்தவையாகும். இவற்றில் அசுட்டதிக்பாலர்கள் உருவங்களுடன் சிவன் உருவம் மற்றும் மேல்மட்டத்தில் காக்கத்தியர் உருவங்களுடன் நந்தி நோக்கும் நடராசர் உருவமும் கொண்டு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]