ஆலன் சர்கீசன்
ஆலன் சர்கீசன் Alan Sargeson | |
---|---|
பிறப்பு | ஆத்திரேலியா, நியூசவுத் வேல்சு, ஆர்மிடேல் நகரம் | 30 அக்டோபர் 1930
இறப்பு | 29 திசம்பர் 2008 | (அகவை 78)
துறை | chemistry |
ஆய்வேடு | கனிம அணைவுச் சேர்மங்களில் உலோக ஆக்சிசன் (1957) |
ஆய்வு நெறியாளர் | பிரான்சிசு பாட்ரிக் துவையர் |
ஆலன் மெக்லியோடு சர்கீசன் (Alan McLeod Sargeson) என்பவர் ஓர் ஆத்திரேலிய கனிம வேதியியல் அறிஞர் ஆவார்.[1] இவர் ஆத்திரேலிய அறிவியல் அகாடமியிலும் ராயல் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.
கல்வி மற்றும் இளமைக்காலம்
[தொகு]சர்கீசன் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இடம்பெற்றுள்ள ஆர்மிடேல் நகரத்தில் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு பிரான்சிசு பேட்ரிக் துவையர் என்பவரின் வழிகாட்டுதலில் சிட்னி பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.
வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சி
[தொகு]அடிலெய்டு பல்கலைக் கழகத்தில் சர்கீசன் முதல் முதலில் கல்வி நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 1958 ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் துவையருடன் மீண்டும் சேர்ந்தார்.[2]
உயிர் கரிமவேதியியல் துறையில் சர்கீசன் ஓர் ஆர்வமுள்ள ஒருங்கிணைப்பு வேதியியலாளராக அறியப்பட்டார். துவையருடன் இவர் வாழ்க்கை முழுவதிலும் முப்பரிமாண வேதியியல் துறையில் முழுமூச்சுடன் ஆராய்ச்சி செய்தார். இவரது ஆராய்ச்சி குழு அமீன் ஈந்தணைவிகளின் வினைகளை ஆராய்ந்தது. செபுல்கிரேட்டுகள் என்று அழைக்கப்படும் கிளாத்ரோசெலேட்டுகளின் தயாரிப்பில் இவை உச்சகட்ட வினையில் ஈடுபடுவதாக இவர் கண்டறிந்தார்.[3]
விருதுகள் மற்றும் பாராட்டுகள்
[தொகு]சர்கீசன் 1983 ஆம் ஆண்டில் ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Brice Bosnich (2011). "Alan McLeod Sargeson FAA. 13 October 1930 – 29 December 2008". Biographical Memoirs of Fellows of the Royal Society 58: 265–282. doi:10.1098/rsbm.2011.0017.
- ↑ Leonard F. Lindoy "Celebration of inorganic lives: Interview with Alan M. Sargeson" Coordination Chemistry Reviews 2005, volume 249, pp. 2731–2739.எஆசு:10.1016/j.ccr.2005.04.015
- ↑ J. Macb. Harrowfield; A. J. Herlt; A. M. Sargeson (1980). Caged Metal Ions: Cobalt Sepulchrates. Inorganic Syntheses. Vol. 20. pp. 85–86. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132517.ch24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132517.
{{cite book}}
:|journal=
ignored (help)