ஆற்றுக்குருடு
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஆற்றுக்குருடு | |
---|---|
An adult black fly with the parasite Onchocerca volvulus coming out of the insect's antenna, magnified 100x | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases, tropical medicine |
ஐ.சி.டி.-10 | B73. |
ஐ.சி.டி.-9 | 125.3 |
நோய்களின் தரவுத்தளம் | 9218 |
ஈமெடிசின் | med/1667 oph/709 |
ம.பா.த | D009855 |
ஆற்றுக்குருடு ஆங்கில மொழி: Onchocerciasis அல்லது ரோபில்ஸ் நோய் , என்பது ஒன்கொசிர்கா ஒல்வலஸ் எனும் ஒட்டுண்ணி புழுத் தொற்றினால் வரக்கூடிய ஒரு நோயாகும்.[1] கடுமையான அரிப்பு, தோலுக்குக் கீழே புடைப்பு, குருடாதல் [1] ஆகியவை இதன் அறிகுறிகள். திராகோமா [2] நோய்க்கு அடுத்து இதுவே தொற்றின் மூலம் குருடாவதற்கு இரண்டாவது பொதுக் காரணமாக இருக்கிறது.
நோய்க்குறியறிதல்
[தொகு]இந்த ஒட்டுண்ணிப் புழுவானது சிமுலியம் வகையைச் சார்ந்த கருப்பு ஈகடிப்பதால் பரவுகிறது.[1] வழக்கமாகத் தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல முறை கடித்தால் மட்டுமே நோய் ஏற்படும்.[3] இந்த ஈக்கள் ஆற்றுக்கு அருகில் வாழ்கின்றன. ஆகவே இந்த நோய்க்கும் இப்பெயர் வந்துள்ளது.[2] ஒருமுறை ஒரு நபரின் உடலுக்குள் சென்று விட்டால் லார்வா க்களை உருவாக்குகிறது. அது தோலை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது.[1] இங்கே அந்த நபரைக் கடிக்கும் ஈக்களுக்கும் தொற்று ஏற்படுகிறது .[1]
தோலின் ஒரு ஆய்வுதிசு வை சாதாரண உப்புநீர் இல் வைத்து லார்வா வெளிவருவதை கவனித்தல், லார்வா இருக்கிறதா எனக் கண்களைப் பரிசோதித்தல், தோலுக்கடியில் உள்ள புடைப்புகளுக்குள்ளே முதிர்ந்த புழுக்கள் உள்ளதா என்று பார்த்தல் உள்ளிட்டவை இந்த நோயை அறிவதற்குரிய பலவழிமுறைகள்.[4]
தடுப்பு முறைகளும் சிகிச்சையும்
[தொகு]இந்த நோய்க்கான ஒரு தடுப்பு மருந்து இல்லை.[1] தடுப்பு முறை என்பது ஈக்களால் கடிபடுவதை தவிர்த்துக் கொள்வதுதான்.[5] பூச்சி விலக்கி பயன்படுத்துதல் மற்றும் சரியான உடைகளை அணிதல் ஆகியவை உள்ளடக்கியதாகும்.[5] பூச்சிகொல்லி தெளித்தல் மூலம் ஈக்களின் தொகையைக் குறைப்பது முயற்சிகளில் அடங்கும்.[1] உலகத்தின் பல இடங்களிலும் வருடத்துக்கு இரண்டு முறை மொத்த மக்கள் தொகைக்கும் சிகிச்சையளிப்பது மூலம் இந்த நோயை அடியோடு ஒழிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.[1] தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையானது இவேர்மேக்டின் மருந்துடன் ஒவ்வொரு ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு அளிக்கப் படுகிறது .[1][6] இந்த சிகிச்சை லார்வாக்களை கொல்கிறது ஆனால் முதிர்ந்த புழுக்களை அல்ல.[7] இணைப்புற்ற ஒல்பகியாஎன்ற பாக்டீரியாவைக் கொல்கின்ற , டாக்ஸிசைக்ளின் என்ற மருந்தானது புழுக்களை பலவீனப் படுத்துவதாக தோன்றுகிறது. மேலும் சிலரால் பரிந்துரைக்கப் படுகிறது.[7] தோலுக்குக் கீழே இருக்கும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கவும் செய்யலாம் .[6]
நோய்த்தொற்றியலும் வரலாறும்
[தொகு]ஏறத்தாழ 1.7 முதல் 2.5 கோடி மக்கள் வரை ஆற்றுநோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் அதில் தோராயமாக 8 லட்சம் பேர் ஓரளவுக்கு பார்வைக் குறைவுடையவர்களாகிறார்கள்.[3][7] பெரும்பாலான தொற்றுக்கள் உப-சஹாரா ஆப்ரிக்காநாடுகளில் காணப்படுகிறது, இருப்பினும் யேமன் நாட்டிலும் நோயாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர் மேலும் மத்திய மற்றும் [[தென் அமெரிக்கா ]வின் தனித்த சில பகுதிகளிலும் காணப் படுகின்றன .[1] 1915 ஆம் ஆண்டு ,ருடால்போ ரோபில்ஸ் என்ற மருத்துவர் முதன்முறையாக இந்தப் புழுவை கண் நோயுடன் தொடர்பு படுத்தினார்.[8] இந்த நோய் உலக சுகாதார நிறுவனம் தயாரித்துள்ள புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் வரிசைப் பட்டியலில் உள்ளது.[9]
குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Onchocerciasis Fact sheet N°374". World Health Oragnization. March 2014. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
- ↑ 2.0 2.1 "Onchocerciasis (also known as River Blindness)". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
- ↑ 3.0 3.1 "Parasites – Onchocerciasis (also known as River Blindness) Epidemiology & Risk Factors". CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
- ↑ "Onchocerciasis (also known as River Blindness) Diagnosis". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
- ↑ 5.0 5.1 "Onchocerciasis (also known as River Blindness) Prevention & Control". Parasites. CDC. May 21, 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.
- ↑ 6.0 6.1 Murray, Patrick (2013). Medical microbiology (7th ed.). Philadelphia: Elsevier Saunders. p. 792. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-08692-9.
- ↑ 7.0 7.1 7.2 Brunette, Gary W. (2011). CDC Health Information for International Travel 2012 : The Yellow Book. Oxford University Press. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-983036-7.
- ↑ Lok, James B.; Walker, Edward D.; Scoles, Glen A. (2004). "9. Filariasis". In Eldridge, Bruce F.; Edman, John D.; Edman, J. (eds.). Medical entomology (Revised ed.). Dordrecht: Kluwer Academic. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-1794-0.
- ↑ Reddy M, Gill SS, Kalkar SR, Wu W, Anderson PJ, Rochon PA (October 2007). "Oral drug therapy for multiple neglected tropical diseases: a systematic review". JAMA 298 (16): 1911–24. doi:10.1001/jama.298.16.1911. பப்மெட்:17954542. http://jama.jamanetwork.com/article.aspx?doi=10.1001/jama.298.16.1911.